அது என்னவென்றால்...
வீட்டிற்கு ஒரு இயற்கை எரிவாயு உற்பத்தி கலன் (எரிசானம்) வைத்து விட்டாலே போதும். அதிலிருந்து வீட்டுக்கு தேவையான எரிவாயு, மின்சாரம் மற்றும் மீத்தேன் போன்றவை பூமிக்கு அடியில் கிடைப்பதைவிட பல மடங்கு பூமிக்கு மேலேயே அதிகம் பெறலாம்.
இந்த எளிய வழியை விட்டுவிட்டு பூமியை துளையிடுவதால் ஒரு சிலருக்கே லாபம்... மக்களுக்கு பெரும் நஷ்டமே...
30 அடி விட்டத்தில் ஒரு துளையிட்டு அது 500 அடியிலிருந்து 1500 அடி வரை பூமிக்கடியில் சென்று சுமார் 35 வருடம் எடுக்கப்படும் மீத்தேன் எளிமையாக கிடைக்க வழி இருக்கும் பொழுது எதற்க்காக இந்த துளையிடுதல் செய்ய வேண்டும்.
இதனால் நிலத்தடி நீர் 500 அடிக்கு கீழ் செல்லும்... நீர் இன்றி நிலம் வறண்டு போகும்... நிலங்கள் வறண்டு போனால் பயிர்கள் கருகும்...
இப்படியே போனால் மேலே இருந்தும் மழை இல்லை... பூமியில் இருந்தும் பயிர்(உணவு) இல்லை... என்றாகி முழுவதும் சுடுகாடாகி நிலக்கரி மட்டுமே மிஞ்சும்.
பின்பு அதையும் எடுக்க ஒருவன் வருவான்.
வீட்டுக்கு வீடு மழை நீர் சேகரிக்கும் தொட்டி அமைத்தது போல்
வீட்டுக்கு வீடு இயற்கை எரிவாயு உற்பத்தி கலன் (எரிசானம்) அமைக்கலாமே...
- இப்படிக்கு திரு.நம்மாழ்வார் அவர்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.