23/04/2017

கஸ்சினி யின் கடைசி பயணம்...


ஸ்பேஸ் க்ராப்ட் ஒன்று வரும் செப்டம்பர் 2017 இல் சனி யின் வளிமண்டலத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ள இருக்கிறது. ஆனால் அதற்கு முன் நமக்கு அளப்பரிய பல தகவல்களை கொடுத்து விட்டு தான் சாகும்.

1997 ஆம் ஆண்டு சனியை அதை சுற்றி உள்ள வலையங்களை மற்றும் அதன் நிலவு களை ஆராய நாசா வால் அனுப்ப பட்ட விண்கலம் தான் கஸ்ஸினி...
சனியின் நிலவுகளில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பு... சனியின் சுழற்சி.. சனியின் வளையங்கள்பற்றிய தகவல் போன்றவற்றை ஆராய்வது தான் நோக்கம் என்றாலும் போகும் வழியில் ஊரை சுற்றி கொண்டு சென்று வெள்ளி மற்றும் வியாழனை புகை படம் எடுத்து அனுப்பிய படி சென்றது இந்த இந்த வண்டி..

நம்ம ஐன்ஸ்டைன் எனும் மகா அப்பாடக்கரின் கோட்பாடை நேரம் கிடைக்கும் போதெல்லாம் விஞ்ஞாணிகள் இன்றும் சோதனை செய்து பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதிலும் அதை செய்தார்கள் அதாவது கசின்னி சூரியனை நோக்கி இருக்கும் போது ரேடியோ அலையை அனுப்பி மற்றும் திரும்ப பெறபட்டு... அது ஐன்ஸ்டைன் ஜெனரல் தியரி படி கால வெளியில் பாதிப்பை உண்டாக்கு கிறதா என்று சோதித்தார்கள் (இன்னும் எத்தனை வாட்டி டா இதை சோதிப்பிங்க) ரிசல்ட் என்ன என்பதை நான் சொல்லி தெரிய தேவை இல்லை ஐன்ஸ்டைன் (மீண்டும் ஒரு முறை) நிரூபிக்க  பட்டார்.


1997 இல் வீட்டை விட்டு கிளம்பிய கஸ்சினி ஊரை சுற்றி கொண்டு 7 ஆண்டுகள் கழித்து 2004 இல் சனியை வந்தடைந்தது.

அதன் பின் இது கொடுத்த தகவல்கள் எல்லாமே அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தவை. சனியின் சுழற்சி... சனியின் வளையங்கள் சனியின் நிலாகள் பற்றி எக்க சக்க தகவல்களை வாரி வழங்கியது கஸ்சினி . மீத்தேன் ஆறு ஓடி மீத்தேன் கடலில் கலப்பதை . மெகா சைஸ் புயலை. ... ஐஸும் வாயும் வெளியில் பீச்ச படுவதை.... சனி நிலவின் பனி மூடிய முகங்களை... அதன் உள் உயிர்கள் இருக்கலாம் என்ற சாத்தியங்களை  என்று பல விஷயங்களை நமக்கு படம் எடுத்து அனுப்பி உள்ளது.

அதில் மிக குறிப்பிட தகுந்த ஒன்று சனி வளையங்ளுக்கு இடையில் இருந்து அது படம் எடுத்து அனுப்பிய ஒரு சிறு புள்ளி... அந்த புள்ளி வேறு ஒன்றும் இல்லை நமது பூமி. (நிஜ படம் இணைத்து உள்ளேன்) படத்தை ஜும் செய்து பார்த்தால் அருகில் இன்னோரு மிக சிறிய தூசு புள்ளியாக நமது நிலாவையும் பார்க்கலாம்.

இப்போது கஸ்சினி தனது கடைசி கட்ட சாகசத்திற்கு தயார் ஆகி விட்டது.
இது வரை சணிக்கும் அதன் வளையங்களுக்கும் இடையில் 22 முறை குதித்த கஸ்சினி இந்த முறை நேரடியாக சனியில் குதிக்க இருக்கிறது. ஆம் இது தற்கொலை தான் வெகு நிச்சயமாக அது அழிந்து விடும் ஆனால் தனது எரி பொருள் தீர்ந்த நிலையில் சனியை முடிந்த வரை நெருங்கி தனது கடைசி மூச்சு வரை முடிந்த அளவு தகவல்களை படங்களை நமக்கு எடுத்து அனுப்புவது தான் கஸ்ஸினி யின் இந்த கடைசி தாவலின் நோக்கம்.


வரும் செப்டம்பர் 2017 இல் நாள் குறித்திருக்கிறார்கள் கஸ்ஸினி க்கு.

மனிதன் தாயாரிப்பில் சூரிய குடும்பத்தில் அதிக தொலைவில் தரை இறங்கிய முதன் பொருள் என்ற பெருமையை அடைய இருக்கிறது கஸ்ஸினி. (தரை தொடாமல் என்று பார்த்தால் வாயெஜெர் 1 நமது ப்ளூட்டோவை எல்லாம் தாண்டி கூட ஓடி கொண்டிருக்கிறது).

அது அனுப்ப போகும் கடைசி தகவலுக்கு காத்திருக்கிறது நாசா..

நண்பர்களே...

பூமி புள்ளியை சனி வளையங்களுக்கு இடையில் இருந்து கஸ்ஸினி எடுத்த புகை படத்தை இணைத்திருக்கிறேன் அதை உற்று பாருங்கள் அந்த புகை படத்தில் ஒரு சின்ன விசித்திரம் உள்ளது.(அந்த விசித்திரம் கேட்க பட்டு நாசா அதற்கு  விளக்கமும் கொடுத்தது)...

அன்பு நண்பன் ரா.பிரபு

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.