ஒழுங்கு வடிவமே உண்மை: உண்மையே இறைநிலை...
ஒழுங்கு என பேசினாலே ஓட தொடங்கும் மனித இனம், ஒழுங்கற்ற மனதோடு வாழும் காரணத்தினால், ஒழுங்கு என்ற ஒன்றை சொன்னாலே முகம் சுழிக்கும் நிலைக்கு வந்து விடுகின்றனர்..
ஒழுக்கத்தோடு தீவிரமாக வாழும் மனிதனை உலகம் பெரும்பாலும் ஒதுக்கி வைத்து விடும்.. இல்லாவிட்டால் அவனை பைத்தியம், அல்லது பிழைக்கத் தெரியாதவன் என்ற கணக்கில் சேர்த்து விடுவார்கள்..
மிகுந்த ஒழுக்க உடையனோடு உறவு கொள்ள பலர் தயங்குவார்கள்.. அப்படி உறவு ஏற்படுத்திக் கொண்டாலும். ஒழுக்கம் உள்ளவனை ஒரு வேடிக்கை மனிதனாகவே கருதி பழகி வருவார்கள்..
ஒழுக்கமற்றவனால் கேடுகள் வராமல் இருக்க மட்டும் போதுமான ஒழுக்கத்தை போதிப்பார்கள்.. ஆனால் உயர்வான ஒழுக்கத்தை யாரும் போதிப்பதில்லை..
ஒழுக்கமற்றவன், தன் ஒழுக்கமின்மையை மறைக்க ஒழுக்கத்தை மற்றவர்களுக்கு போதித்து தப்பித்து கொள்வார்களே தவிர, தன் அளவில் ஒழுக்கமின்மை அதிகம் உடையவர்களாக இருப்பார்கள்...
உலக மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ஒழுக்கமின்மை ஓரிரு இடத்தில் இருந்தும் அதில் பலப்பட்டும் மரணத்தை தழுவி அழிந்து கொண்டு இருக்கிறார்கள்..
ஒழுக்கமின்மைக்கும் அழிவிற்கும் என்ன சம்பந்தம் ?
இருக்கிறது.. மிக மிக திடமாக இருக்கிறது.. பின்னி பிணைந்து இருக்கிறது..
பிரபஞ்சமே ஓர் ஒழுங்கு வடிவம்.. அதனால் அதன் ஆற்றலும் ஓர் மிக உயர்ந்த ஒழுங்கு வடிவமாக உள்ளது..
அதில் மிக சிறு ஒழுங்கின்மை வந்தாலும், மிக பெரிய பிரளயம் வந்து விடும்.. அதன் ஒழுங்கு தன்மையால் மட்டுமே உலகம் இன்று சுற்றிக் கொண்டு இருக்கிறது...
பிரபஞ்ச பேராற்றல் மிகவும் துல்லிதமான ஒழுங்கு தன்மையில் இருக்கிறது.. அந்த பேராற்றலில் மிக சிறு மாற்றம் ஏற்பட்டாலும். பல சூரிய மண்டலங்கள் எரிந்து சாம்பலாகி விடும்... அந்த பேராற்றலால் தான் அனைத்து உயிர் இனங்களும் உயிர் பெற்று வாழ்கின்றன...
ஒழுங்கு தன்மை வாய்ந்த பேராற்றலில் அனைத்து உயிர் இனங்களும் உயிர் பெற்றது என்னவோ உன்மைதான்..
ஆனால் அந்த உயிர் இனங்கள் ஒழுங்கு நிலையான பேராற்றலை அண்டி வாழாமல் ஒழுங்கு தன்மை அற்ற செயல் பாடு உடைய படைக்கப் பட்டவைகளை அண்டி வாழ தொடங்கியதே பெரும் தவறாய் போய் உயிர் நிலை சிதைந்து மரணத்தையும் அழிவையும் பெற்றது..
ஆம்.. உயிர்கள் படைத்ததின் ஒழுங்கு நிலை சாராமல் தன்னோடு படைக்கப் பட்டவைகளின் தொடர்பால் ஒழுக்கமின்மையை சார்ந்து சார்ந்து சீர் குழைந்து போய் கொண்டு இருக்கின்றன..
ஒழுங்கின்மையின் முடிவே மரணம்.. இதுவே முடிவான சத்தியம்... முடிவான முடிந்த உண்மை..
ஒழுங்கின் வடிவமாக உள்ள பேரண்ட பேராற்றலையும், பேரறிவையும் பெற வேண்டும் எனில் அதன் ஒழுங்கு தன்மைக்கு ஒரு உயிர் தன்னை மாற்றிக்கொள்ளும் பொழுது, அந்த உயிர் பேராற்றலையும் பேரறிவினையும் பெறும் பாக்கியத்தையும் பெற முடிகிறது..
ஆனால் உலகம் ஒழுங்கமின்மையிலிருந்து மீண்டும் மீண்டும் ஒழுக்க மின்மையை நோக்கியே நகர்ந்து கொண்டு இருக்கிறது..
ஆறறிவு படைத்த உயிர்கள் அறிவு குறைந்து குறைந்து கடைசியில் ஓரறிவினையும் இழந்து அறிவே அற்ற நிலையில் கல்லாகி மண்ணாகி போகிறான்.. ஒழுங்கற்ற தன்மையை பிடித்துக் கொள்ள மிக மிக எளிதாக உள்ள நிலையில் ஒழுங்கு நிலை நோக்கி நகருவதற்கு மனிதனுக்கு இயலாமல் உள்ளது..
எல்லா உண்மை உபதேசங்களையும் கற்று அதில் பொய்மையை புகுத்துவதே மனிதனுடைய வேலையாக உள்ளது..
இன்றைய நிலையில் உண்மை தனித்து விடப் பட்டு இருக்கிறது.. அதனை அடையாளம் கண்டு கொள்ள எவரும் இல்லை போல் தோன்றுகிறது.. அதனை ஆன்மீகமும், பக்தியோகம் போன்ற அனைத்து யோகங்களும், இன்று மனித இனத்தால் பொய்மை கலக்கப் பட்டு, பலனற்று போய் கொண்டு இருக்கிறது..
இதனை ஒரு மனிதன் தன்னை ஒழுங்கு நிலைக்கு திரும்பும் போது மட்டுமே அத்தனையும் பொய் என உணர தொடங்கும் பொழுது ஞானம் அடைய தொடங்குகிறான்.. அந்த ஞானத்தில் பொய்மையை அடையாளம் கண்டு உண்மையை நோக்கி நகரத் தொடங்குகிறான்...
உண்மை ஒழுங்கு தன்மையின் முழு வடிவம் என உணர தொடங்கி ஒழுங்கினை கடைபிடிக்க தொடங்குகிறான்.. அவனே சித்தன்..
சித் என்றால் பொய்மையையும் உண்மையையும் அறிந்து கொண்ட உண்மை விளக்கம் பெறல் என்பதாகும்..
சத் சித் ஆனந்தம் என்பதை வள்ளலார், இயற்கை உண்மை, இயற்கை விளக்கம் இயற்கை அனுபவமாக சொல்லி இருக்கிறார்..
இதில் சித் என்பது விளக்கம் பெறல் என்பதாகும்.. பொய்மை உண்மையின் முழு விளக்கம் பெற்றவனே சித்தன்..
இப்படியான சித்தன் பொய்மையிலிருந்து விலகி இருக்க தொடங்குவதால், பொய்மை உலகம் அவனை அடையாளம் தெரிந்து கொள்ள முடிவதில்லை..
சித்தனை ஒரு நாளும் மனிதன் கண்டு பிடிக்க முடியாது.. சித்தர் தரிசனம் காண ஏதேதோ செய்கின்ற மனிதன், அத்தனையும் ஒழுங்கு தன்மை அற்றவை ஆதலால் ஒருநாளும் உண்மை சித்தனை காணவே முடியாது..
ஆனால் அவன் கண்டதாக அனுபவ பட்டதெல்லாம் என்ன வென்றால் பொய்மையிலே உழன்று மாண்ட மனிதனின் ஆவியே..
இன்று ஆவியுடன் பேசும் மனிதர்கள் உண்டு.. ஆனால் உண்மை வடிவான இறைவனுடன் பேசி உண்மையான தீர்வு தருபவர்கள் எவரும் இல்லை.. அப்படியே தந்தாலும் அதனை கேட்பவர்கள் எவரும் இல்லை..
காரணம் பொய்மையாளர்களுக்கு பொய்மை தவிர வேறு ஒன்றும் புரிவதில்லை...
உண்மை விளக்கமான சித்தை பெற்றவர்களே சித்தர் என முடிவுடன் அந்த ஒழுங்கு தன்மை பெற உகந்த இடம் எது வென அடுத்த பகுதியில் பார்க்கலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.