சிறையிலிருந்து டாக்டர் கபீல்கான் கண்ணீர் கடிதம்...
நிர்வாக குளறுபடிக்கு என்னை பலிக்கடா ஆக்கிவிட்டார்கள் கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவர் கபில் கான் சிறையில் இருந்து எழுதிய கடிதம்.
உத்திரபிரதேச முதல்வர் மருத்துவமனைக்கு வந்ததோடு என் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது.
யோகி ஆதித்யநாத் என்னை பார்த்து கேட்டார்.
நீதான் அந்த குழந்தைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்க செய்த மருத்துவரா?
என்று நான் ஆம் என்றேன்.
அப்படின்னா நீ ஆக்சிஜன் சிலிண்டர் கொடுத்து ஹீரோ ஆயிடுவியா இறு உன்னை நான் கவனித்து கொள்கிறேன் என்று கோபத்துடன் சொல்லிவிட்டு சென்றார்.
அதன் பிறகு என்னையும் என் குடும்பத்தையும் பலமுறை சித்ரவதை செய்து கொடுமைபடுத்தினார்கள். அவர்களின் தவறுக்கு என் மீது பழி சுமத்தி என்னை சரணடைய சொன்னார்கள்.
தற்போது நான் கடந்த 8 மாதங்களாக சிறையில் உளவியல் ரீதியாக கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறேன்.
இரவு முழுவதும் வெட்டவெளியில் கொசுக்கடியில் படுக்க வைக்கப்படுவதுடன், தாழ்ப்பாள் இல்லாத டாய்லட் உள்ளிட்ட எனது வாழ்வின் தரத்தையே தலைக்கீழாக்கி விட்டனர்.
எனது ஒன்னரை வயது குழந்தையை கடந்த 8 மாதங்களாக பிரிந்து வாழ்கிறேன்.
நான் சிறையில் அடைக்கப்பட்டபோது,
11 மாத குழந்தையாக இருந்த அவனை வைத்துக்கொண்டு எனது மனைவி சிறையை சுற்றி வந்து கொண்டிருப்பது கடும் வேதனை அளிப்பதாக உள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.