236 நாட்களாக பாளை மத்திய சிறையில் கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட வழக்குகளுக்காக விசாரணை சிறைவாசியாக இருக்கும் சூழலியல் போராளி தோழர் முகிலன் அவர்கள் இன்று (11.05.2018) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வரும் முதல்வரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பின்வரும் எட்டு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம்...
1. மணல் கொள்ளையர்களால் நாங்குநேரி காவலர் ஜெகதீசு துரை கொள்ளப்பட்டதற்கு காரணமான, தேசத்தின் சொத்தான ஆற்று மணலை முறைகேடாகவும், சட்டவிரோதமாகவும் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்காமல் அனுமதித்ததற்கு பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சரும், தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பதவி விலகக் கோரி.
2. தமிழக அமைச்சர்கள் முதல் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வரை 33 ஆறுகளையும் பங்கு போட்டு சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடப்பதை தடுத்து நிறுத்த கோரியும்.
3. தமிழகத்தின் ஆற்று மணல் முறைகேடாக கொள்ளையடிக்கப்பட்ட பகுதிகளில் இது வரை பொறுப்பிலிருந்த அனைத்து வருவாய்துறை, காவல்துறை, பொதுப்பணி துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய கோரி.
4. தமிழ்நாட்டில் புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்காமல், வெளிநாட்டு மணலை தடை செய்யாமல் இறக்குமதி செய்ய கோரி..
5. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடு...
6. ஸ்டெர்லைட் விரிவாக்கத்தை ரத்து செய்...
7. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய கோரி..
8. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகி போல் செயல்படும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய கோரியும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.