மனிதனுக்கு அவனது உடம்பைக் கொண்டு செய்ய வேண்டிய ஞானச் செயலைக் கற்பிக்கும் அனுபவப் பேரறிவுப் பெருநூல் சித்தர் இலக்கியம்.
அவ்விலக்கியங்கள் அறக்கருத்துக்களை வலியுறுத்தும் என்றும் மனமாசின்றிக் காக்கவும் தீமைகளை நீக்கி நன்மைகளைச் செய்யவும் பல அறச் செய்திகளைக் கூறுகின்றன என்றும்..
மனிதனை மனிதனாக்குவதற்கு வேண்டிய மனப் பயிற்சி தந்து அவனை மனிதனாக்கிப் பின் வானவராக உயர்த்தும் உயய நோக்கங்கள் கொண்டவை.
எட்டுநாகம் தம்மைக் கையால் எடுத்தே ஆட்டுவோம்;
இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்;
கட்டுக் கடங்காத பாம்பைக் கட்டி விடுவோம்;
கருவிடந் தன்னைக் கக்கி ஆடு பாம்பே;
மூண்டெயும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்;
முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்;
தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்;
தார்வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே;
செப்பய மூன்றுலகும் செம்பொன் ஆக்குவோம்;
செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்;
இப்பெய உலகத்தை இல்லாமற் செய்வோம்;
எங்கள் வல்லபம் கண்டு நீ ஆடு பாம்பே;
''கல்லையும் உருக்கலாம் நார் உத்திடலாம்
கனிந்த கனியாகச் செய்யலாம்;
கடுவிட முண்ணலாம் அமுதாக்கலாம் கொடுங்
கரடி, புலி, சிங்கம் முதலா
வெல்லு மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி
வித்தையும் கற்பிக்கலாம்;
மிக்க வாழைத்தண்டை விறகாக்கலாம் மணலை
மேவு தேர் வடமாக்கலாம்;"
இராமலிங்க அடிகாளர் தெவித்துள்ள மரணமிலாப் பெருவாழ்வு சித்தர்கள் கூறிய நெறியேயாகும்.
இவர்கள் ஊழையும் வெல்லலாம் என்பதற்கான வழி முறைகளைத் தம் பாடல்களில் கூறியுள்ளனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.