ஒரு இனத்தின் வரலாறு...
இந்த கட்டுரை எழுதக்காரணம்
ஒற்றுமையே...
மற்றும் பல விஷயங்களை நாம் நினைவுபடுத்திக் கொண்டே இருத்தல் நல்லது என்ற நிலையில் தற்சமயம் இருப்பதால் இந்த வரலாறு,
குதிரைக்கும் திருமணத்திற்கும் என்ன சம்பந்தம்?
ராவுத்தர்களுக்கும் பாரசீக த்திற்கும் என்ன சம்பந்தம்..
இசுலாமியர்களுக்கும் தமிழக மன்னர்களுக்கும் என்ன சம்பந்தம்.
ஒற்றுமைக்கும் இந்த பதிவிற்க்கும் என்ன சம்பந்தம்..
இப்படி பல கேள்விகளுக்கு பதில்
இந்த கட்டுரை..
இரண்டு தொகுப்பாக வரும் இவற்றை படித்துவிட்டு பகிர்வது சிறப்பு..
நாம் இன்றைய சூழலில் குதிரைகளை காண்பது அரிது..
ஆனால் ஒரு காலகட்டத்தில் குதிரைகள் தான் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்தது என்பது நம்ப முடியாத உண்மை.
இன்றைய ஆயுதக்கிடங்கை நம்பி அமெரிக்காவும்..
எரிபொருளை நம்பி மத்தியக்கிழக்கு நாடுகளும் இருப்பது போல..
பல்லவர்கள் தங்கள் ஆட்சியை குதிரையை மட்டும் நம்பி இருத்துள்ளனர்..
தமிழ் அரசன்களின் எந்தப்படையிலும் குதிரைப்படை இருந்துள்ளது.
அதேபோன்று அறுபத்து நான்கு கலைகளின் குதிரை ஏற்றம் ஒரு முக்கிய கலை.
போரில் குதிரைப்படையை நிற்வகிக்க தனியாக ஒரு துறையை வைத்துள்ளனர் நமது மூதாதையர்கள் என்கிறது வெண்பாமாலை.
சோழப்பேரரசு பெருக்கத்திற்க்கு குதிரைப்படைகள் மட்டுமே உதவியது என்று கலிக்கந்துபரணி கூறுகிறது. .
இதில் ஒரு சந்தேகம் ஏற்படலாம்
அது என்ன யானைப்படை எல்லாம் இருக்கும் போது குதிரைப்படையை மட்டும் கூறவேண்டும்.
ஆம் யானைப்படையை விட குதிரைப்படைகள் மிகவும் முக்கியமானது.
தமிழக அரசர்களின் குதிரைகள் பெரும்பாலும் பாரசீகம் துருக்கி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்.
வேறு நாட்டு உடல்வாகு உள்ள குதிரைகள் இங்குள்ள தட்பவெப்ப நிலையோடு ஒட்டிக்கொள்ளும்
பல நாட்கள் பயணம் செய்த அனுபவம் உள்ள குதிரைகள் நாடுபிடிக்க பக்கத்திலே உள்ள நாடுகளின் தட்பவெப்ப நிலைக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ளும்..
இப்படியாக பெரும் செல்வாக்கு உடையது குதிரைகள் .
பாண்டிய மன்னன் காலத்தில் ஆண்டுக்கு பதினாயிரம் குதிரைகள் பாரசீகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று வரலாற்று குறிப்பு உள்ளது.
காயல்பட்டினம் மற்றும் தேவிப்பட்டிணம் துறைகளில் கரை இரக்கப்பட்டு அங்கிருந்து நெல்லை மதுரை என்று பிரித்து அனுப்பபட்டது.
அப்படி அழைத்துச்செல்லும் வழியை குதிரைவழிக்காடு என்றும்
குதிரைவழிக்குளம் என்றும் அழைக்கப்படுகிறது. .
சில ஊர்களில் உள்ள கிராமங்களில் இப்படியான பெயர் இருக்குமானால் அது அந்தக்கால குதிரை ஓட்டிப்போன தடம் என அறிந்துக்கொள்ளுங்கள்.
பாரசீக நாட்டு குதிரைகள் பரி என்றும் துருக்கி நாட்டு குதிரைகள் துரகம் என்றும் மத்திய ஆசியா குரஸான் பகுதி குதிரைகள் கோரம் என்றும் வழங்கப்பட்டது..
சரி மூன்று மாபெரும் மன்னர்கள் சேரன் சோழன் பாண்டியன் அரசர்கள் தங்களது வாகனமாக எந்த குதிரையை வைத்திருந்தனர் என்று பார்போம்
சேரன் மன்னர் குதிரைக்கு
பாடலம்
சோழ மன்னர் குதிரைக்கு
கோரகம்
பாண்டிய மன்னன் குதிரைக்கு
கனவட்டம் என்றும் பெயர்.
FAR என்ற பாரசீக வார்தைக்கு குதிரை என்று அர்த்தமாம்
பஃர் என்ற வார்தையில் இருந்து பரி என்று வார்தை உருவாகியது
சேணம், லகான், சவுக்கு, சவாரி, என்ற குதிரைகள் சம்பந்தமான வார்த்தைகள் பாரசீகத்தில் இருந்து தமிழுக்கு வந்தவைதான்.
குதிரைகள் சம்பந்தமாக பார்த்தாகிவிட்டது குதிரைகளை பயிற்றுநர்களை பற்றி நாம் பேசவேண்டுமே கண்டிப்பாக
பேசவேண்டும்.
ராவுத்தர்கள் என்றால் யார்?
ராவுத்தராயர்கள் என்றால் யார்?
குதிரை வாணிபத்தால் பாரசீக வியாபாரி நமது பாண்டிய மன்னனை
சந்திக்க வருதல்.
சங்க காலத்தில் ராவுத்தர்கள் பற்றிய செய்திகள். இப்படி எல்லாவற்றையும் அடுத்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்..
பேசுவோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.