திருச்சி மாவட்டம் முசிறி கீழத்தெருவைச் சேர்ந்த கண்ணன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 11 குழந்தைகள் பிறந்தன. அதில் 2 குழந்தைகள் இறந்துவிட்டன. 9 பிள்ளைகள் மட்டும் உள்ளன.
இந்த வேளையில், சாந்தி கர்ப்பம் தரித்ததார். இதையறிந்த கிராம சுகாதார செவிலியர் சுப்புலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தினார். ஆனால், அதற்கு சாந்தி மறுத்துவிட்டார்.
மேலும், குழந்தைகள் அதிகமாக இருப்பதால், மருத்துவமனையில் தனக்கு குடும்ப கட்டுப்பாடு செய்துவிடுவார்கள் என அவர் கூறியுள்ளார். இதற்காக எவ்வித பரிசோதனையும் அவர் செய்து கொள்ளவில்லை.
இதையடுத்து, மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள், மேற்கண்ட கிராமத்துக்கு சென்று, சாந்தியை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்ற சாந்தி, மீண்டும் வீடு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சாந்திக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வீட்டில் இருந்த சாந்தி, கணவர் கண்ணனின் உதவியுடன் தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்டார். அதில் பெண் குழந்தை பிறந்தது.
தகவலறிந்து அங்கு சென்ற சுகாதார துறையினர், சாந்தியை அழைத்து சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.
இதுகுறித்து சாந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தனது பிரசவத்தை தானே பார்த்துக் கொண்டதாகவும், தனது கணவர் சிறிது உதவி மட்டும் செய்ததாக கூறினார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.