16/11/2018

ஒடிசாவில் மறுவீடாக மாறிவரும் தமிழகம்...


தமிழ்நாடு – தமிழர்களின் தாயகமாக நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் நாட்டை அடக்க முடியாமல் இருப்பதற்கு காரணம் அதில் வாழும் தமிழர்களின் எண்னிக்கை தான். அதனை குறைந்துவிட்டால் நாம் நினைத்ததை சாதிக்கலாம் என்று நிணர்கிறது நடுவன் அரசு. தமிழ்நாட்டை இப்படி மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான், தமிழ்நாட்டில் உள்ள தனது அலுவலகங்கள், தொடர்வண்டித் துறை, துறைமுகம், வானூர்தி நிலையம் உள்ளிட்ட தொழிலகங்கள் அனைத்திலும் தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு வெளி மாநிலத்தவர்களை 80 முதல் 100 விழுக்காடு வரை வேலையில் சேர்க்கிறது.

அதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் நலனை பாதுகாக்க அந்தந்த மாநிலம் தமிழகத்தில் தூதரகம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். அப்படி ஒடிசா மாநிலத்தால் உருவாக்கப்பட்ட ஒடிசா தூதரகம் தான் ஒடிசாபவன்.

சென்னை பள்ளிக்கரணையில் புதிதாக கட்டப்பட்டுள்ளது ஒடிசாபவன். ஒடிசா பவனுக்காக சென்னை வேளச்சேரியில் 5 கிரவுண்டு நிலம் குடுத்து கட்டிடத்தை திறந்து வைத்து இருக்கிறது தமிழக அரசு. இது ஏன் என்று காரணம் கூறுகையில். ஒடிசாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் ஒடிசா மக்களின் நலனுக்காக இந்த கட்டிடம் திறக்கப் பட உள்ளது என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும் கல்வி, தொழில், மருத்துவம் உறவினர் சந்திப்புக்காக வருவோர் இந்த பவனில் தங்கி பணிகளை முடித்து விட்டு செல்லலாம் எனவும் பட்நாயக் தெரிவித்தார்.

இதை எளிதாக நாம் கடந்து விட கூடாது. இவை அணைத்து தொடக்கமே.. இன்றைய நாள்வரை தமி்ழ்நாட்டில் குடியேறியுள்ள வெளி மாநிலத்தார் எண்ணிக்கை  கோடியை தாண்டும். வரமபு மீறி குடியேறும் வெளிமாநிலத்தவரால் வேலைவாய்ப்பு, சட்ட ஒழுங்கு, பொருளியல் சுரண்டல், பெருவாரியாக அதிகப்பட்டுள்ளது. வரைமுறையின்றி அயல்நாட்டுத் தொழில் நிறுவனங்கள், வெளி மாநில முதலாளிகளின் தொழிலகங்கள், வணிக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பெருகி வருகின்றன. இதனால், தமிழர்களின் தொழில்களும், வணிகங்களும் நசுக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான சட்டம் வேண்டும். நடுவணரசு நிறுவனங்களில் 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் நிலம் உள்ளிட்ட சொத்துகள் வாங்கத் தடை விதிக்க வேண்டும். இதனை எதிர்த்து அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்.

அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய்த் தமிழ்நாட்டில் வந்து குவிகின்றனர். இதனால் சொந்த மண்ணில் தமிழர்களின் வேலை வாய்ப்புகள் வெளியாரால் பறிக்கப்படுகின்றன. அத்துடன் தமிழ்நாட்டில்
தமிழர்களின் மக்கள் தொகையை விஞ்சும் அளவிற்கு அயலார் மக்கள் தொகை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

அந்த நிலை ஏற்பட்டால் தமிழ்நாடு என்ற பெயர், தமிழ் ஆட்சி மொழி தமிழர் ஆட்சி என்பதெல்லாம் காணாமல் போய்விடும். கலப்பின மாநிலமாகத் தமிழ்நாடு மாறிவிடும்.

வரம்புமீறி குடியேறும் வெளி மாநிலத்தவரை கட்டுக்குள் வைப்போம்..

குற்றச் செயல்களையும், வேலை பறிப்பையும் தடுத்து நிறுத்துவோம்..

தமிழர் ஆய்வுக் கூடம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.