16/11/2018

அதிர்வலைகள்...


இந்த பிரபஞ்சமே ஒரு கோணத்தில் பார்க்கும்போது அனைத்துமே அதிர்வலைகளாக தான் உள்ளது.
அதற்கு ஒரு எடுத்துகாட்டு பின்வருபவை.

1939 ஆம் ஆண்டு சுவிடன் நாட்டை சேர்ந்த Dr.Jarl என்பவர் திப்பெத்தில் உள்ள துறவிகள் மடலாயத்திற்கு சிறப்பு விருந்தினராக லாமா தலைமையில் அழைக்கப்பட்டு இருந்தார்,

அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு சென்ற அவர் சில நாள்கள் அங்கேயே தங்கிருந்தார், அவர்களுடன் நல்ல நட்புஉறவு ஏற்ப்படவே துறவிகள் கட்டும் கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு ஒருமுறை Dr.Jarl லையும் அழைத்து சென்றனர்.

உடன் வந்த துறவிகளோ கையில் பறை, நீள்குழல் போன்ற இசைகருவிகளை எடுத்து வந்தனர்,Dr.Jarl லோ
கட்டுமான பணிகளுக்கும் இசை கருவிகளுக்கும் என்ன சம்மந்தம் என குழம்பியிருந்தார்.

கட்டுமான பணி நடக்கும் குன்றை அடைந்ததும் அங்கு பெரிய அளவிலான பாறைகள் ஆங்காங்கெ வெட்டப்பட்டு கிடந்தன அவைகள் உருவாக்கப்படும் பாறைகளான மதில்சுவருக்கு ஏற்றவாரு சில அடி தூரமும், உயரமும் கொண்டு செல்லப்பட வேண்டி இருந்ததது.

துறவிகளோ தாங்கள் கொண்டுவந்த இசைகருவிகளை தாங்கள் தூக்கப்பட வேண்டிய   பாறைகளில் இருந்தது 63 மீட்டர் தொலைவிலும் ஒரு குறுப்பிட்ட கோணத்திலும் வரிசைபடுத்தினர் அதில் மொத்தம் 19 கருவிகள்,அதில் 13 பறைகள் மற்றும் மற்ற பிறஇசைகருவிகளும் அடக்கம், பிறகு வாத்தியங்களை இசைக்க தொடங்கினர் அதில் இருந்து 6 விதமான எக்காளம் (ஒலி) எழுப்பப்பட்டது,

அதனை தொடர்ந்து துறவிகள் ஒருவித ஒலி அமைப்புடன் கூடிய வழிபாடுகளையும் நடத்தினர்.

அதனை தொடர்ந்து கனமான பாறை அந்தரத்தில் மிதக்க தொடங்கியது குன்றின் கீழில் இருந்து 250 மீட்டர் தொலைவிருக்கு அந்தரத்தில் மிதந்தபடி குன்றின் உச்சியை அடைந்தது இது போன்று ஒருமணிநேரத்தில் 5-6 பாறைகளை அவர்கள் இடம்பெயர்த்தி கட்டுமான பணிகளை செய்தனர்.

இதை பார்த்த Dr.Jarl  அதிசயத்து போயினார் அவரது கண்களை அவராலே நம்பமுடியவில்லை, பிறகு அவர்  இதனை படமாக்கி கொண்டு கிளம்பினார்.

அப்படியென்றல் யோசித்து பாருங்கள் உலகில் இன்றும் காணப்படும் மிகப்பெரிய அளவிலான பழங்கால கட்டிடங்கள் எப்படி கட்டப்பட்டது என புரியும்.

அறிவியலில் இப்போது சத்தத்தை கொண்டு சிறிய அளவிலான கற்களை மிதக்கவைக்கமுடியும் என இப்போது நிருபித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த அதிர்வலைகளை உருவாக்குவதன் மூலம் அனைத்தையும் சாதிக்கமுடியும்.

உதரனத்திற்க்கு இவற்றை கொண்டு முந்தைய அரசர்கள் வானிலையை கட்டுபடுத்தியுள்ளனர்.

மற்றும் புவியின் சுழ்ற்ச்சியையும் ஒழுங்குபடுத்தி பஞ்சம் வராமல் தடுத்துள்ளனர்.

மற்றும் இதுவே வரும் காலங்களில் மருத்துவ முறைகளில் ஒன்றாகவும் வரவாய்ப்பு உள்ளது.

இவற்றை முறையாக பயன்படுத்துவதன் மூலம் காடுகளை கூட உருவாக்கமுடியும். எதையும் நல்லவற்றிக்கு பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லது தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.