16/11/2018

குழந்தை பருவம்..


குழந்தைகள் பிறக்கும் போது விவாதம் செய்ய அறிவே இருக்காது. விவாதம் என்றால் என்ன என்றே தெரியாது.

குழந்தைகள் அனைவரும் ஏழு வயதிற்கு முன் பிடிக்க பட்டுவிட வேண்டும்.

குழந்தை இந்து, கிருத்துவன், முஸ்லிம்,
அல்லது பிற மதங்கள் அல்லது எதாவது ஒன்றில் நிலைபடுத்த பட்டுவிட வேண்டும் இவை எதுவும் எந்த வித்தியாசமும் ஏற்படுத்துவதில்லை.

ஆனால் எழு வயதிற்குள் முன்னால் கட்டி போட்டு விடுங்கள். ஏழு வயதிற்குள் அந்த குழந்தை வாழ்க்கை முழுவதும் அறிந்து கொள்பவற்றில் ஐம்பது சதவீதத்தை கற்று கொண்டுவிடும்.

இந்த ஐம்பது சதவீதம் மிகவும் அர்த்தம் நிறைந்தது ஏனெனில் இதுதான் அடிப்படையாகிறது..

எல்லா அறிவு அமைப்பும் அவன் குழந்தையாயிருக்கும் போது கற்று கொண்டதன் அடிப்படையில் தான் அமைகிறது..

இந்த காலகட்டத்தில் ஏழு வயதுக்கு முன் குழந்தைகளுக்கு எந்த தர்க்கமும் தெரியாது. எந்த வாதமும் தெரியாது. அவன் நம்புகிறான், அனுபவிக்கிறான், நம்புகிறான்.

அவனால் நம்பிக்கை இல்லாமல் இருக்க முடியாது ஏனெனில் அவனுக்கு நம்பிக்கை என்றால் என்ன? அவநம்பிக்கை என்றால் என்ன என்று தெரியாது..

நீங்கள் என்ன சொன்னாலும் அவனுக்கு அது உண்மையாகத்தான் தோன்றும்
அதயே திரும்பி திரும்பி சொன்னால் அந்த குழந்தை மயங்கி விழும்..

இப்படித்தான் எல்லா மதங்களும் வழிபாடுகளும் மனிதனை பயன்படுத்தி கொண்டு விட்டன குழந்தை எதாவது ஒரு பாதையில் நிலைக்க வலியுறுத்தபடுகிறது..

ஒரு முறை அந்த பாதை ஆழமாக வேரூன்றி விட்டால் ஏதுவும் செய்ய முடியாது.  பிற்காலத்தில் அந்த குழந்தை மதம் மாறினால் கூட ஏதும் மாறாது..

மாறாக இந்து, கிருத்துவம், இஸ்லாம், வழிபாடு, அப்படியே, தத்துவங்கள்  இருக்கும் அடிப்படையின் காரணமாக.

தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.