இவர் அமைச்சராக இருந்த போது, பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டது.
சிகரெட், புகையிலைப் பொருள்கள் விளம்பரங்கள், சிறுவர்களுக்குப் புகையிலைப் பொருள்கள் விற்பது, கல்விக்கூடங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பது என்பவை தடை செய்யப்பட்டது.
புகை பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை இந்தியத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் மூலம் கவர்ச்சிகரமாகக் காட்டி இளைஞர்களைப் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குவதைத் தடுக்கக் கடுமையான தணிக்கை நெறிகளைக் கொண்டு வந்தார்.
இவரது இந்தச் செயல்கள், புகையிலை, மற்றும் மதுபானப் பெருநிறுவனங்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாக்கின.
எனினும், அமெரிக்கப் புற்றுநோய்க் கழகம் இவரது புகையிலைப் பொருள்கள் எதிர்ப்புச் செயல்களைப் போற்றி சூலை 14, 2006 அன்று இந்திய மருத்துவ அமைச்சகத்துக்கு லூதர் எல். டெர்ரி விருது வழங்கிப் பாராட்டியது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.