தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் என்பவரின் மகள் ரம்யா. பி.எட்.,பட்டதாரியான இவர் இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும் பெரியகுளம் அருகே உள்ள சரத்துபட்டியை சேர்ந்த ரங்கராஜ் என்பவருக்கும் இந்த மாதம் 11ம் தேதி திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரம்யா மற்றும் ரங்கராஜ் ஆகிய இருவரும் சரத்துபட்டியில் இருந்து புலிக்குத்தி கிராமத்திற்கு மறுவீட்டிற்காக வந்தனர்.
பின்னர் அங்கிருந்து அருகில் நடுத்தெரு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றனர். மணமக்களுடன் ரம்யாவின் சித்தப்பா முத்து கிருஷ்ணன் உடன் சென்றார்.
ரங்கராஜன் வீட்டுக்குள் சென்று விட்டார்.
வீட்டுக்கு வெளியே ரம்யாவும், முத்து கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து பேசி கொண்டிருந்தவர்கள் மயங்கி விழுந்தனர். உடனடியாக உறவினர்கள் இருவரையும் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் விஷம் குடித்திருப்பதாக தெரிவித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரம்யா உயிரிழந்தார். முத்து கிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. அதில், ரம்யா தனது தந்தையின் தம்பியான சித்தப்பா முத்துகிருஷ்ணனை காதலித்து வந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை.
சித்தப்பாவை எல்லாம் திருமணம் செய்ய கூடாது என்று அறிவுரை கூறினர். ஆனால் ரம்யா காதலில் பிடிவாதமாக இருந்தார்.
இதனால் ரம்யாவுக்கு பலவந்தமாக உறவினரான ரங்கராஜுடன் திருமணம் செய்து வைத்தனர்.
ஆனாலும் வேறு ஒருவருடன் திருமணம் நடந்து விட்டதே என்ற வேதனையில் விஷம் குடித்தது தெரியவந்தது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.