28/10/2020

பாஜக மோடியின் வாரணாசி தொகுதியில் உள்ள 20000க்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர்கள் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக 8ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...

 


விசைத்தறிகள் மீதான மின் கட்டணத்தை மாநில அரசு கடுமையாக உயர்த்தியதே இதற்குக் காரணம். ஏற்கனவே விசைத்தறி ஒன்றுக்கு நிலையாக மாதம் சுமார் ரூ.100 வரை செலுத்தி வந்தனர்.

தற்போது யூனிட் அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று யோகி அரசு நிர்ணயித்தது. அதன் படி அவர்கள் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.1500 செலுத்த வேண்டி இருக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

ஏற்கனவே மிகக் குறைந்த வருமானம் ஈட்டி வரும் இவர்களில் மிகப்பலர் தங்கள் வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்பட்டு விடும் என்ற நிலையில் போராடி வருகின்றனர்.

ரூ.3000 கோடி செலவில் ராமருக்குக் கோவில் எழுப்ப முடிகிறது. பல கோடி செலவில் கோடிக் கணக்கான விளக்குகள் ஏற்றி தீபாவளி கொண்டாட உபி அரசால் முடிகிறது. ரூ,8500 கோடி செலவில் பிரதமருக்கு விமானம் வாங்க மத்திய அரசால் முடிகிறது. ஆனால் இவர்களின் சாதாரணக் கோரிக்கைக்கு செவி சாய்க்க மோதி மற்றும் யோகி அரசுகளுக்கு மனம் இரங்கவில்லை.

மேக் இன் இண்டியா என்று 56 இஞ்ச் அளவுக்கு வாய் கிழியப் பேசுவதால் பயனில்லை. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று வெட்டிப் பேச்சு வேறு.

இந்துவாக இணைவோம் என்றார்கள். ஏன் இவர்கள் இந்துக்கள் இல்லையா? அம்பானி அதானிக்கள் மட்டும் தான் ஆட்சியாளர்களின் கண்களுக்கு இந்துவாகத் தெரிவார்களா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.