28/10/2020

தலைநகரில் இப்படியும் ஒரு சைக்கோ..?

 


உடற்பயிற்சிக்காக சைக்கிளிங் செல்லும் பெண்களை ரிஜிஸ்ட்ரேஷன் இல்லாத காரில் பின்தொடர்வது.. மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத சமயம் பார்த்து பெண்ணிடம் வழி கேட்பது போல் நடிப்பது.. உடல் பாகங்களை தொடுவது. 

எல்லாவற்றிற்கும் மேலாக திடீரென பேண்ட் ஜிப்பை கழட்டி  கேவலமாக நடந்து பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவது..

அடுத்தடுத்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட நான்கு  பெண்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர்.. போலீசாரும் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து அந்தக் காரில் வந்து அக்கிரமத்தைச் செய்தவர் யார் என கடைசியில் கண்டுபிடித்துள்ளனர்.

அவர் வேறு யாருமல்ல,டெல்லி காவல் துறை சிறப்பு பிரிவில் எஸ்ஐ-யாக இருக்கும் புனித் கிரேவல்..

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் மைனர் என்பதால் போக்ஸோ சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ. புனித்  உள்ளே தள்ளப்பட்டுள்ளார்.. நான்கு தனித்தனி வழக்குகள் பதிவாகி உள்ளன.

நிறைய பெண்கள் இதேபோல் பாதிக்கப்பட்டுள்ளது புனித்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களும் புகார் கொடுக்க முன்வந்தால் வழக்குப்பதிவு இன்னும் அதிகரிக்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.