13/10/2020

தமிழா இனமே எல்லை.. அதுவே அரண்...

 


மலையாளிகளுக்கு அமைப்புகள்  இருக்கின்றன... தமிழரையோ தெலுங்கரையோ மற்றவர்களையோ அதில் பார்க்க முடியாது.. சேர்க்க மாட்டார்கள்...

தெலுங்கருக்கு அமைப்புகள் இருக்கின்றன.. நூல் பிடித்தது மாதிரி தெலுங்கர்கள் மட்டும் தான் உள்ளே இருப்பார்கள்.. ஒரு தமிழரையோ மற்றவர்களையோ உள்ளே விடமாட்டார்கள்...

கன்னடர், பஞ்சாபியர், வங்காளியர். இத்தாலியர், இங்கிலாந்தியர் என்று

எல்லோருமே அப்படித்தான் இருகிறார்கள். அதாவது, மிகச் சரியாக இருகிறார்கள்..

ஆனால் எல்லா தமிழ் அமைப்புகளுக்குள்ளும் தெலுங்கர்கள் இருகிறார்கள் மற்றவர்களும் இருகிறார்கள்...

இருகிறார்கள மட்டுமல்ல..  பெரும்பாலானவற்றில் அவர்களே பொறுப்புகளில் இருகிறார்கள்..

இந்த இழிவுக்கு முட்டுக் கொடுக்க அந்தகாலத்துப் பராசக்தி படம் முதலே நமக்கு உசுப்பேத்திக் கொண்டே இருகிறார்கள்..

வந்தாரை வாழவைத்த தமிழ் நாடு  என்று.. இதைக் கேட்டு கேட்டு மெய் மறந்து மயங்கிக் கிடக்கிறார்கள் நம் தமிழர்கள்.. மயங்கிய நிலையில் இருக்கும் தமிழர்களிடம் இருந்து  எல்லாவற்றையும் உருவிக் கொண்டிருக்கிறார்கள்...

தமிழ்நாட்டிலுள்ள தமிழத் தேசிய அமைப்புகளின் தொடர் தேய்மானத்திற்கு பின்னணியில் இருப்பது திட்டமிட்ட ஊடுருவலே...

மார்சியம் பேசுவார்கள், பெரியாரியம் பேசுவார்கள், பொதுவுடைமை பேசுவார்கள், விடுதலைப் புலிகளைப் பற்றி பேசுவார்கள், ஈழம் பற்றி உருகுவார்கள், திராவிடம் பேசுவார்கள், தமிழ் பற்றிப் பேசுவார்கள்...

ஆனால் தமிழர், தமிழர் நாடு, தமிழர் அரசியல் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்..

விடுதலைப் பயணத்தில் இமயம் போன்று எதிரே நிற்கிற எதிரிகளைவிட எலிபோல இருக்கிற ஊடுருவல் தான் பேரிடர் நிறைந்தது..

நாடும் மொழியும் நம் இரு கண்கள்...

தமிழர் நாடு நமது இலக்கு....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.