04/09/2017

அப்போலோ 20 ரகசியம் அம்பலம்: நிலவில் கண்டறியப்பட்ட ஏலியன் பெண்...


உலகில் ஏரியா 51 போன்று ரகசியமாக இயங்கி வரும் சோதனை கூடங்கள் மற்றும் ஆய்வு மையங்கள் குறித்து ஓரளவு தகவல்கள் நமக்குத் தெரியும்..

ஆனால் அமெரிக்க விண்வெளி மையமான நாசா மிகவும் ரகசியமாக மேற்கொண்ட அப்போலோ 20 குறித்த தகவல்கள் நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்.

இதை ஏன் நாம் தெரிந்து கொள்ள வேண்டும், இது ஒட்டு மொத்த உலகமும் அறிந்து கொள்ள வேண்டிய ரகசியம் ஆகும், அப்படியானால் அது உங்களுக்கும் தெரிய வேண்டுமே..

உண்மையில் அப்போலோ 20 திட்டம் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் இருந்தன, உண்மையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகமும் பலருக்கு எழுந்தது.

ஆனால் இன்று வரை அப்போலோ 20 திட்டம் குறித்த மர்மம் தொடர்வது இது குறித்த பல்வேறு ஐயங்களை எழுப்புகின்றது.

உண்மையில் நடந்தது என்ன என்பதை விரிவாக ஸ்லைடர்களில் விளக்கியுள்ளோம்..

அப்போலோ 20 திட்டமானது நாசாவின் மிக ரகசியத் திட்டம் ஆகும்.

இந்தத் திட்டம் ப்ராஜக்ட் அப்போலோ என அழைக்கப்பட்டது.

அப்போலோ திட்டம் 1963 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்தது.

இந்தத் திட்டமானது நாசா சார்பில் மனிதர்களோடு விண்வெளி சென்ற மூன்றாவது விண்கலம் ஆகும்.


இந்தத் திட்டம் மூலம் மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் சென்று அப்போலோ 11 மூலம் 1969 ஆம் ஆண்டிற்குள் அவர்களை மீண்டும் பூமிக்குக் கொண்டு வருவது ஆகும்.

1972 ஆம் ஆண்டு அப்போலோ 17 விண்கலத்தோடு இந்தத் திட்டத்தை நாசா கைவிடுவதாக அறிவித்தது.

இருந்தும் நாசா சார்பில் அப்போலோ 18, 19 மற்றும் அப்போலோ 20 ஆகிய திட்டங்கள் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாசாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் அதிகச் செலவு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டு இந்தத் திட்டத்தில் பணியாற்றிய விண்வெளி வீரர்கள் வேறு திட்டங்களுக்கு மாற்றப்பட்டனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று திட்டங்கள் கைவிடப்பட்டதால் அதிகளவு விண்கல பாகங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தன.

இவற்றில் சில வன்பொருள்கள் கென்னடி விண்வெளி மையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன, பயன்படுத்தப்படாத இதர வன்பொருள்கள் திரைப்படங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன.

நாசா அறிவித்த தகவல்கள் ஒரு பக்கம் இருக்க, 2007 ஆம் ஆண்டு ரிட்டையர்டுஃபேப் (Retiredafb) என்ற தனி நபர் பெயரில் யூட்யூப் தளத்தில் பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இந்த வீடியோக்கள் அப்போலோ 20 திட்டத்தின் போது படமாக்கப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

வெளியான வீடியோ அமெரிக்கா மற்றும் சோவியத் கூட்டணியில், ஆகஸ்டு 1976 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் வீடியோ ஆகும்.

இதனைப் பதிவேற்றம் செய்தவர் முன்னாள் விண்வெளி வீரர் என்றும் தன் பெயர் வில்லியம் ருட்லெஜ், 78 என அறிவித்தார்.

இவரது வீடியோக்களில் அப்போலோ 20 விண்கலத்தில் நிலவில் இருந்து படமாக்கப்பட்டதைப் போன்றும் அங்கு ஏலியன் பெண் ஒருவரின் உடல் போன்றவை காணப்பட்டது.

இந்த ஏலியன் பெண் இண்டர்நெட்டில் மோனா லிஸா என அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

ருட்லெஜ் வீடியோக்கள் அதிகப் பிரபலம் அடைந்ததோடு, யூட்யூபில் மட்டும் சுமார் 15,00,000க்கும் அதிகமான பார்வையாளர்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களில் ருட்லெஜ் தனது யூட்யூப் சேனல் ஹேக் செய்யப்பட்டு, ஒரு வீடியோ அழிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் தனது வீடியோக்களை Revver.com என்ற முகவரியில் மாற்றினார், பின் இந்தத் தளமும் இயங்காமல் போனது குறிப்பிடத்தக்கது.

அப்போலோ 14 விண்கலம் நிலவின் துருவ பகதிகளுக்கு சென்று பல்வேறு விண்கலங்கள், பண்டைய நகரங்கள், விசித்திர வடிம் கொண்ட கட்டிடங்கள் போன்றவைகளை படம்பிடித்ததாக ருட்லெஜ் தெரிவித்துள்ளார்.

அப்போலோ 20 விண்கலமானது டெல்போர்ட் கிரேட்டர் எனும் பகுதியில் தரையிறங்கியதாகவும், இந்நகரம் சுமார் 15,00,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அங்கு இரண்டு ஏலியன் பிணங்களை பார்த்ததாகவும் அவற்றை 16 எம்எம் ஃபிலிம் மூலம் படமாக்கியதாகவும் தெரிவித்தார்.

அவர்கள் பார்த்த பெண் ஏலியன் உடல் பூமிக்கு கொண்டு வரப்பட்டு தற்சமயம் அது பூமியில் எங்கோ உயிர் வாழலாம் என்றும் ருட்லெஜ் தெரிவித்தார்.

தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாத காரணத்தால் அப்போலோ 20 திட்டத்திற்கு அவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், கடவுள் மீது நம்பிக்கை இல்லாதது வித்தியாசத்தை ஏற்படுத்தியதாகவும் ருட்லெஜ் தெரிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.