04/09/2017

மறைக்கப்படும் மறுக்கப்படும் தன் உயிரை இழந்த நிகழ்கால தமிழ் தேசிய லட்சிய போராளி சுபா முத்துக்குமார்...


தமிழ்த்தேசிய மீட்சிப்படையில் தன்னை இணைத்துக்கொண்டு ஆயுத வழியில் தமிழ்நாடு விடுதலை பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தவர்..

அந்த முடிவுக்கு வருவதற்கு ஆயுத வழியில் போராடி உயிர்நீத்த தமிழ்நாடு விடுதலை படையின் தோழர். தமிழரசனையே முன்னோடியாக கொண்டவர்..

1. ஆயுத பயிற்சிக்காக ஈழம் சென்றார். அங்கு தேசிய தலைவர் வழிகாட்டலின்படி சிங்கள படைக்கு எதிராக புலிகளின் பல்வேறு வெற்றிகரமான பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்றார்.

2. தேசிய தலைவரின் தனி பாதுகாப்பு அணிக்கு (சைபர் விங்) தேர்வு செய்யப்பட்டார்.

3. தமிழீழத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றியும் பயிற்சியும் பெற்று தமிழ்நாடு திரும்பினார்.

4. தமிழ்நாடு விடுதலைக்காக தமிழ்த்தேசிய மீட்சிப்படை தலைமை ஏற்று வழி நடத்தினார். அத்துடன் புலிகளுக்கு தேவையான பொருட்களையும் இங்கிருந்து அனுப்பி வந்தார்..

5. சென்னை சிறையிலிருந்து தப்பித்த போராளிகள் ரோமியோ மற்றும் அவர்களது தோழர்களை பத்திரமாக தமிழ் ஈழம் அனுப்பி வைத்தார்.

6. வேலூர் கோட்டை சிறையிலிருந்து சுரங்கம் அமைத்து நாளு பெண் போராளிகள் உட்பட 43 விடுதலை புலி போராளிகளை பொறுப்பேற்று ஈழத்துக்கு அனுப்பி வைத்தார்

7. புதுக்கோட்டை மனமேல் குடியில் ஈழத்துக்கு பொருட்கள் அனுப்ப காத்திருந்த போது தமிழ் நாடு காவல் துரையால் கைது செய்யப்பட்டு. தடா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்படார்...

8. இரண்டாரை ஆண்டுக்கு பிறகு பினையில் விடுதலை ஆனார்.. விடுதலை ஆனவுடன் சந்தன காட்டில் வீரப்பனாருடன் சேர்ந்து போராட்டக் களம் அமைத்தார்..

வெள்ளி திருப்பூர் காவல் நிலையத்தை வீரப்பனாருடன் தலைமையேற்று தாக்கதல் நடத்தி ஆயுதங்களை எடுத்துச்சென்றார்..

கண்ணட நடிகர் ராஜகுமாரை பினையாக கொண்டு வருவதற்கு களம் அமைத்து கொடுத்தார்...

9.ராஜகுமாரை விடுவிக்க தமிழரின் தாக பிரச்சனையான காவிரி நீர் பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு...

அதிரடி படையால் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்கு வாழ்வாதாற தீர்வு போன்ற கோரிக்கைகளோடு சுபா முத்துக்குமாரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வீரப்பனார் முன் வைத்தார்.

10. 2 ஆண்டுகளுக்கு பிறகு வீரப்பனாருக்கு பொருட்கள் கொண்டு சென்றதாக கொளத்தூர் மணி அவர்களுடன் கைது செய்யப்பட்டார்.

பிறகு கண்ணட சிறையில் அடைக்கப்பட்டு கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்..

1992 கர்னாடகத்தில் நடந்த காவிரி கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வெடிகுண்டு தயாரித்ததாக கைது செய்யப்பட்டு பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டார்.

11. நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு பினையில் வெளியில் வந்தார் மீண்டும் தமிழ் தேசிய மக்கள் அரசியலில் களம் புகுந்தார்..

மதுரையில் அறுத்தெரிவோம் முள்வேலி முகாமை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார்.

நாம் தமிழர் கட்சி மீண்டும் உருவாகி தமிழ்தேசியர்களை ஒருங்க்கினைத்து வலுமை மிக்க இயக்கமாக மாற்றி இரண்டு ஆண்டு வலம் வந்தார்..

தமிழகம் முழுவதும் வலிமைப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் தமிழின துரோகிகளால் 15.02.2011 அன்று இரவு 9 மணி அளவில் புதுக்கோட்டை நகரத்தில் படுகொலை செய்யப்பட்டார்...

கேள்வி : இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஏன் இன்னும் உண்மையை வெளிக் கொண்டு வர முன் வரவில்லை?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.