வன்னியர் என்றால் சாதி ...
கள்ளர் என்றால் சாதி இல்லை..
தேவர் என்றால் சாதி இல்லை...
இதுதான் தமிழ்த்தேசியமா?
தமிழன் முதல்வராக வேண்டும் என்றால், பாமகவினர் வன்னியர் முதல்வராக வேண்டும் என்கிறார்களே என உணர்ச்சிவசப்பட்டார் - நாம் தமிழர் இயக்கத்தின் சீமான்..
ஒரு வன்னியரை முதல்வராக்குவோம் என்ற முழக்கத்துடன் முன்னெடுக்கும் அரசியல் தமிழினத்தை 500 ஆண்டுக்காலத்திற்கு பின்னால் தள்ளும் பிற்போக்குத்தனமான அரசியலாகும். இப்படிப்பட்ட சாதிய அரசியல், தமிழின உணர்வு எனும் ஒர்மையின் மாபெரும் பலத்தை உடைத்து, தமிழ்த் தேசிய அரசியலை பலவீனப்படுத்தும்.
மதிப்பிற்குரிய இராமதாஸ் முன்னெடுக்கும் இந்த அரசியலை நாம் தமிழர் கட்சி முழுமையாக எதிர்க்கிறது என்று அறிக்கை விட்டார் சீமான்.
ஆனால், பிறமலைக் கள்ளர் - வாழ்வும் வரலாறும் எனும் 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த நூலுக்காக நடத்தப்பட்ட நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் காசித்தேவர் அய்யநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
'வன்னியர்' என்பது மட்டும் தமிழ்த் தேசிய அரசியலை பலவீனப்படுத்தும் என்றால் - 'கள்ளர்' என்பது தமிழ்த் தேசிய அரசியலை பலவீனப்படுத்தாதா?
அது எப்படி?
முற்போக்குக் கூட்டத்துக்கும் தமிழ்த்தேசியக் கூட்டத்துக்கும் வன்னியர் எனும் போதெல்லாம் அது சாதி வெறியாகத் தெரிகிறது?
கள்ளர், தேவர் எனப் பேசினால் - அதுமட்டும் முற்போக்காகவும் தமிழ்த்தேசியமாகவும் மாறிப்போகிறது?
உண்மையில் முற்போக்கு, தமிழ்த்தேசியம் என்பதெல்லாம் வேறொன்றும் இல்லை. வெறும் "வன்னியஃபோபியா" மட்டும்தான்.
விளக்கமாக இங்கே காண்க: "வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய் VANNIYAPHOBIA"
(குறிப்பு: 'பிறமலைக் கள்ளர் - வாழ்வும் வரலாறும்' நூல் வெளிவந்த போதே 2012 ஆம் ஆண்டில் மதுரை நகர் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் இந்த நூலை வரவேற்று சுவரொட்டி ஒட்டினர். சாதி எதிர்ப்பு பேசும் மார்க்சிஸ்ட் கட்சியின் தமுஎச அமைப்பினர் இந்த நூலைப் போற்றிப் புகழ்ந்தனர். ஆனந்தவிகடன் இந்த நூலைப் போற்றி பேட்டி வெளியிட்டது.)
மிக முக்கிய குறிப்பு: கள்ளர், தேவர், முக்குலத்தோருக்கு எதிராக இந்த பதிவு இல்லை...
அனைத்து தமிழ் சாதிகளின் உண்மையான வரலாறுகளை என்றுமே போற்றுவோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.