05/05/2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் - பகுதி 11...

இன்று சத்திய யுகம் எனும் வருங்கால தீர்க்கதரிசனத்தின் 11-ம் பகுதியில் இடம்பெறும் குறிப்புகளை இங்கு காண உள்ளோம். இந்த 11-ம் தீர்க்க தரிசனத்தில் இடம்பெறும் குறிப்புகள் ஒவ்வொன்றும் வருங்காலத்தைப் பற்றி எடுத்துக் கூறும் நிகழ்வுகளின் தொகுப்பாகும்.



இந்த 11-ம் தீர்க்க தரிசனத்தில் இன்று முதலாவதாக நாம் காண இருப்பது என்னவெனில், “இந்திய தேசத்தின் வட எல்லையில்“ மிகப்பெரிய சோகச் சம்பவம் ஒன்று நடைபெற இருப்பதாகவும், இது ஆன்மீகம் சார்ந்த பகுதியில் நடைபெறக் கூடிய மிகப்பெரிய சோகச் சம்பவமாக இருக்கும் என்றும், இந்திய ஆன்மீக வரலாற்றில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கவே முடியாது என்று 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே நமக்கு தெரிவிக்கின்றது.


இந்திய தேசத்தின் வான்வெளிப் பாதையில் பல வினோத பறக்கும் வான் ஊர்திகள் இரவு நேரத்தில் பறக்க உள்ளதாகவும், இது முழுக்க முழுக்க வேற்றுகிரகவாசிகளின் செயலாக இருக்கும் என்று 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



தெய்வீகம் சார்ந்த அற்புத நிகழ்வுகள் இனி தமிழகத்தில் அதிகமாக நடக்க உள்ளதாகவும், வரும் மாதம் ஒன்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அப்படி ஒரு தெய்வீக அதிசயம் ஒன்று நடக்க உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது. இந்த நிகழ்வினால் 1000 வருடங்களுக்கு ஒருமுறை இப்பூமியின் மீது ஏற்பட உள்ள இறைவனின் நீயாயத் தீர்ப்பு நிச்சயம் நடக்கும் என்பதற்கான அறிகுறியாக இதனை கருத வேண்டும் என 11-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.


கலைமகள் வீற்றிருக்கும் ஒரு சன்னதியில் தெய்வீக சங்கல்பம் ஒன்று தற்போது நடைபெறும் என்றும், இது சத்திய யுகத்திற்கான முக்கிய நிகழ்வாக மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இதனால் தமிழக கல்வித்துறையில் பெரும் மாற்றங்கள் நிகழ உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


தமிழக அரசியல் களம் இனி சூடு பிடிக்க உள்ளதாகவும், அரசியல் வாதிகளும், தமிழக நடிகர்களும் மோதிக் கொள்ளும் வன்முறை சம்பவங்கள் இனி தமிழகத்தில் அதிகம் நடக்க உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் இங்கே பல நிகழ்வுகளை சுட்டிக் காட்டுகின்றது.


பல்வேறு அரசியல் கட்சிகள் பங்குபெறும் ஒரு கூட்டு சபையில் பல கூச்சல் குழப்பங்கள் தற்போது நடைபெற உள்ளதாகவும், அதில் ஒரு அரசியல் தலைவர் தாக்கப்படும் சம்பவம் உடனே நடக்க இருப்பதாகவும், இதனால் செய்தி ஊடகங்களுக்கு இடையே தள்ளுமுள்ளுகள் ஏற்பட்டு இது ஒரு பெரிய செய்தியாக தமிழக பத்திரிக்கையிலும் செய்தி ஊடகங்களிலும் வெளிவரும் என்றும், இச்சமயத்தில் “தமிழகம்“ கடும் மழைக்கு பாதிப்புக்குள்ளாகும் என்று 11-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


இணைய தளத்தில் ஒரு செய்தி உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை தற்போது கிளப்பும் என்றும், இது உலக அழிவுப் பற்றிய செய்தியாக வலம் வரும் என்றும், இதனால் உலக மக்கள் பெரும் பீதிக்கு ஆளாக நேரிடும் பல சம்பவங்கள் இனி தொடர்ந்து நடக்க உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கையை இங்கே பதிவு செய்கிறது.


காலம் தன் கோலத்தை கட்டாயம் உலக மக்களுக்கு உணர்த்தும் என்றும், சித்தர்களின் இராஜ்யம் இப்பூமியில் வேர் ஊன்றும் அதிசயங்கள் இனி நடக்க உள்ளதாகவும், அதற்கு முத்தாய்ப்பாக பழனி மலை அதன் சுற்றுப்புற மலைகளில் பல வினோத சம்பவங்கள் நடக்க இருப்பதாக 11-ம் தீர்க்கதரிசனம் இங்கே நமக்கு தெரிவிக்கின்றது.


தமிழக ஆன்மீகவாதி ஒருவர் தற்போது அரசியல் களத்தில் குதிக்கும் நிகழ்வு ஒன்று தற்போது தமிழகத்தில் நடக்க இருப்பதாகவும், இது ஒரு நடிகரின் முயற்சியாக இருக்கும் என்றும், அந்த ஆன்மீகவாதி தனது அறிவிப்பை அறிவித்த 48 மணி நேரத்தில் தமிழக அரசியல் தலைவர் ஒருவர் மரணம் அடைவார் என்றும், அதே சமயத்தில் தமிழக சிவாலயம் ஒன்று திடீரென்று இடிந்துவிழும் சம்பவம் ஒன்று நடக்கும் என 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு நிகழ்வின் மறுவினையை இங்கே படம்பிடித்து காட்டுகின்றது.



சீனா நாட்டில் உள்ள ஷாவ்லின் புத்த மடாலயம் ஒன்றில் ஒரு மாபெரும் நிகழ்வு நடக்க உள்ளதாகவும், இது இறைவனின் மறு கொள்கைக்கு ஒரு சான்றாக அமையும் என்றும், இது உடனே விரைந்து நடக்க இருப்பதாக 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.


தமிழகத்தில் வாழ்ந்த போதிதர்மன் எனும் பல்லவ மன்னனின் வீரம் செறிந்த குங்ஃபூ தற்காப்புக்கலை மீண்டும் தமிழகத்தில் தன் மதிப்பை விதைக்க உள்ளதாகவும், இதற்கான அனைத்து தெய்வீக நிகழ்வுகளும் தமிழகத்தில் அரங்கேற்றம் ஆகிடும் என 11-ம் தீர்க்க தரிசனம் மீண்டும் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

காய்தே மில்லத் மாவட்டத்தில் முஸ்லீம் வசிக்கும் பகுதியில் ஒரு இறை அதிசயம் தற்போது நடக்க உள்ளதாகவும், இது 2-ம் நபி அவர்களின் வருகையாக இருக்கும் என முஸ்லீம் மக்கள் பேசிக் கொள்ளும் சம்பவம் ஒன்று தற்போது அரங்கேறிட உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.


மேற்கண்ட இச்சம்பவத்தை கிருஸ்துவ மக்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்கான ஒரு அற்புத நிகழ்வாக சித்தரிப்பார்கள் என்று 11-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


கடலூர் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு பகுதி என்றும், கடல் மட்டம் உயர்ந்து கடல் உட்புகும் சோகச் சம்பவம் ஒன்று விரைந்து நடக்க உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் மிகுந்த ஒரு எச்சரிக்கை செய்தியை இங்கு மக்களுக்காக சுட்டிக் காட்டுகின்றது.


பெரும் புயலால் ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகிய “கடலூர்“ மீண்டும் பெரும் தாக்குதலுக்கு ஆளாக உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் இங்கே தனது கருத்தை “அழுத்தமாக“ பதிவு செய்கிறது.


மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான் என்கிற தாரக மந்திர வார்த்தையில் உள்ள மகத்துவத்தை இனி மக்கள் இறைவனிடமிருந்தே எதிர்நோக்க வேண்டும் என்றும், இதில் உள்ள சூட்சுமத்தை புரியாத அரசியல்வாதிகளின் “கொட்டம்“ இனி ஆட்டம் காண உள்ளதாகவும், இனி மக்கள் சமுதாயம் நன்கு விழிப்படைந்து கொள்ளும் என்றும் 11-ம் தீர்க்கதரிசனம் இங்கே வரக்கூடிய மாற்றத்தை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

மறைந்த முன்னாள் முதல்வரின் சொத்துக்கள் பொதுவுடைமையாக்கும் நிகழ்வு ஒன்று விரைந்து அரங்கேறிட உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கின்றது.


கன்னடர்களுக்கு இது போதாத காலமாக இருக்கும் என்றும் வரலாறு காணாத சம்பவம் ஒன்று அங்கே அரங்கேற்றம் ஆகிட உள்ளதாகவும், இது அந்த ஊரின் மீது இறைவன் வழங்கும் நீயாயத் தீர்ப்பின் எதிரொலியாக இருக்க உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே “அழுத்தமாக“ பதிவு செய்கிறது.



இனி வட மாநிலங்களில் இயற்கை சீற்றங்கள் அதிகமாக இருக்கும் என்றும், அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், பூடான்தேசம், வங்கதேசம் போன்றவை கூட அதிகமாக பாதிப்புக்குள்ளாகும் என்று 11-ம் தீர்க்கதரிசனம் மேலும் இங்கு ஒரு குறிப்பை சுட்டிக்காட்டுகின்றது.


பல்லவர்கள் வாழ்ந்த பகுதியில் அதிசய கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட இருப்பதாகவும், அது இறைவனின் வருகையை தெரிவிக்கும் அதிசய கல்வெட்டாக அமைய உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


இறையாளன் இயேசுவின் வருகையை குறித்த செய்திகள் இனி தேதிவாரியாக செய்தி ஊடகங்கள் செய்தியை வெளியிடுவார்கள் என்றும், அச்செய்தியின் நம்பகத்தன்மையை இனி மக்கள் கண்டறிந்து கொதிப்படையும் பல சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்க உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.


இறைவன் இடம்பெறும் இறுதிசபை என்பது ஒரு யோகா அமைப்பு என்பது சென்ற தீர்க்கதரிசனங்கள் வாயிலாக நாம் அறிந்து கொண்டோம். அந்த இறுதிசபையில் அனைத்து மதத்தினரும் பாகுபாடின்றி யோகக்கல்வியை கற்று வருவார்கள் என்றும், அந்த சபையில் இறைவன் வெளிப்படுத்திய “இறை முத்திரை“ அங்கே காணப்படும் என்றும், அங்கே அவதாரம் மேற்க் கொள்ளும் இறைசக்தி “ஆதிசக்தி“ என்ற திருநாமத்தை தாங்கி பல அற்புதங்களை செய்து வருவார் என்றும், அச்சபையில் உள்ளோர் இடத்தில் சித்தர்களின் பல ஆன்மாக்கள் எழுப்பபட்டு இருக்கும் என 11-ம் தீர்க்கதரிசனம் தனது குறிப்பை மெய்பட எடுத்துக் கூறுகிறது.


புகழ்மிக்க ஒருவன் என்பது இந்த அகில உலகத்தை ஆளும் இறைவனின் மாற்று வடிவத்தை சூடியவன் என்று பொருள். அவனின் பிரவேசம் அன்னை ஆதிசக்தியால் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தும் நாள் மிக, மிக அருகில் உள்ளது என்றும், இது நடக்கும் தினத்தை உலக மக்கள் கொண்டாடுவார்கள் என 11-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.

இறைவனின் வருகைக்காக காத்திருக்கும் நாம், அவரின் பிரஜாதிபதியை வரவேற்க காத்திருப்போமாக.

குறிப்பு :  இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.