தமிழ்நாட்டின் கிராமங்களிருந்து ஏழை மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக தனியாக வேறு மாநிலங்களுக்கு சென்று வர முடியுமா?
துணைக்கு பெற்றோரும் செல்ல வேண்டுமே?
கடைசி நேரத்தில் ரயில் பதிவுகூட கிடைக்காதே, எப்படிப் போக முடியும்?
ஓரிரு நாட்கள் முன்பாகவே சென்று தங்கியிருந்தால்தானே தேர்வு நாளில் பதற்றமின்றி தேர்வு எழுத முடியும்?
அப்படித் தங்குவதற்கு செலவு அதிகமாகுமே?
மாணவிகளுக்கு இது இன்னும் சிரமம் இல்லையா?
மொழி தெரியாத பகுதிகளில் இன்னும் சிரமங்கள் இருக்குமே?
பதற்றத்தோடு இருந்தால் தேர்வுகளை சரியாக எழுத முடியாதே?
இந்தக் கேள்விகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விடுகிறேன்.
1. தமிழகத்தில் போதுமான மையங்கள் இல்லை என்பதால் வேறு மாநிலங்களில் தேர்வு செய்ய வேண்டி வந்தது என்கிறது சிபிஎஸ்ஈ. அதன் பொருள் என்ன? தேர்வு நடத்தக்கூடிய தரமான பள்ளிகள் தமிழகத்தில் இல்லையா? கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் கல்வி நிலையங்கள் மோசமா? அப்படி மோசமாக இருந்தால், ஐஐடி-ஜீ தேர்வு மையங்கள் விஷயத்தில் இந்தப் பிரச்சினை வரவில்லையே எப்படி? அவ்வளவு ஏன், கடந்த ஆண்டும் நீட் தேர்வு நடைபெறத்தானே செய்தது? அப்போது இந்தப் பிரச்சினை வரவில்லையே, அது எப்படி? இதிலிருந்து தெரிய வருவது - சிபிஎஸ்ஈ மகா குப்பைத்தனமாக ஏற்பாடு செய்திருக்கிறது என்பதே.
2. இதுபோன்ற தேர்வுகளில் தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்குமாறு விண்ணப்பத்தில் கூறப்பட்டிருக்கும். பொதுவாக, 1, 2, 3 என்று முன்னுரிமை கொடுத்து 3 தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்கலாம் என்று தரப்பட்டிருக்கும். ஒரு மாணவர் தேர்வு செய்த மூன்று மையங்களும் மாணவர் தாமாக முடிவு செய்வதில்லை. தேர்வு நடத்தும் சிபிஎஸ்சி முடிவு செய்து அறிவித்த மையங்கள்தான். அப்படியிருக்க, இந்த மூன்றிலும் இல்லாத ஒரு தேர்வு மையத்தை எப்படி, எந்த அடிப்படையில் தேர்வு செய்தது சிபிஎஸ்ஈ? மூன்றில் ஒன்றைத் தேர்வு செய்ய முடியாது என்றால் என்ன மயிருக்கு அந்த மூன்று ஆப்ஷன்கள் தர வேண்டும்?
3. தேர்வு எழுதுவதற்கான ஒரு மொழியை மாணவர் தேர்வு செய்வார். ஆங்கிலம் அல்லது இந்தி ஒருவர் தேர்வு செய்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த இரண்டும் இல்லாத வங்காள மொழியில் எழுது என்று சிபிஎஸ்ஈ சொன்னால் எப்படியிருக்கும்? அதற்கு ஒப்பானதுதான் மாணவர் தேர்வு செய்யாத ஒரு இடத்தை அவன்மீது திணிப்பது.
4. தமிழகத்திலேயே தேர்வு மையங்களை மாற்றித்தர கால அவகாசம் இல்லை என்கிறது சிபிஎஸ்ஈ. இதுகூடச்செய்ய முடியாத ஓர் அமைப்புதான் தேர்வுகளை நடத்துகிறது என்பது எவ்வளவு பெரிய அபத்தம்? சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவதற்குச் செலவு செய்த அந்த நேரத்தில் மாற்று ஏற்பாடுகளை செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. காரணம், அகங்காரம்.
5. ஒரு வாதத்துக்காக கேட்கிறேன். ஒருவேளை ராஜஸ்தான் / மத்தியப் பிரதேச மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்களைக் கொடுத்திருந்தால் அந்த மாநில ஆட்சியாளர்கள் சும்மா இருந்திருப்பார்களா? மைய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சிபிஎஸ்ஈயை தம் இஷ்டப்படி ஆட்டி வைத்திருப்பார்கள் இல்லையா? தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் மத்தியின் கால்களை நக்கிக் கொண்டிருப்பவர்கள். அவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்தப் பிரச்சினை மைய அரசுக்குத் தெரியாமல் இருக்குமா என்ன? மத்திய அரசிடமிருந்து சிபிஎஸ்ஈ இயக்குநருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு போதும், ஒரே நாளில் எல்லாம் மாறியிருக்கும். ஆனால் மத்திய அரசு செய்யாது. தமிழகத்தின்மீது அவர்களுக்கு அவ்வளவு வெறுப்பு.
இதுதான் இப்போதைய பிரச்சினையின் மூலம். இதை சரி செய்யாதவரை தமிழ்நாட்டுக்கு விடிவு கிடையாது.
கேனத்தனமாக முடிவு செய்த சிபிஎஸ்ஈ அதிகாரிகளும், அவர்களுக்கு ஒத்தூதும் தீர்ப்பளித்த நீதிபதிகளும், பிரச்சினையைப்புரிந்து கொண்டும் நமட்டுச்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும் புழுத்துச்சாகட்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.