பல்லடம் பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. பனியன் தொழிலாளியான இவருக்கு வேணி என்ற மனைவியும், வசந்த், பிரேம்நாத் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். வசந்த 10-ம் வகுப்பும், பிரேம்நாத் 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக பிரேம்நாத் தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளதாகத் தெரிகிறது. சில நாட்கள் கழித்து வாங்கி தருவதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை ரவி வேலைக்கு கிளம்பிய போது, பிரேம்நாத் மீண்டும் போன் கேட்டுள்ளார். சில நாட்கள் கழித்து வாங்கித் தருவதாக சொல்லி விட்டு, ரவி வேலைக்கு சென்று விட்டார். தாயார் வேணியும், வசந்த்தும் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த பிரேம்நாத் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, வீட்டிற்கு வந்து பார்த்த வேணி மகன் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து, தனது கணவருக்கு தகவல் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.