05/05/2018

வலிமையான இனம் பெரும்பாலும் தன் இன துரோகத்தால் தான் வீழும்.இது எழுதப்படாத விதி...


இம்முறை நமக்கு தான் அந்த நிலை. பொதுவாக அரசியலில் அன்றிலிருந்து இன்றுவரை நடக்கும் சூழ்ச்சிகள் சாதாரண குடிகளால் கண்டறிவது கடினம் தான்.

ஏனெனில் அதை ஏற்பவரின் நன்மைக்காக, தன் ஆட்சியை நிலை நிறுத்த, பொன், பொருளீட்ட,எதிரியை ஒழிக்க என பல தீய செயல்கள் அரங்கேறும்.

ஆனால் இன்று ஆட்சியாளர்கள் போடும் சட்டங்கள், கொண்டு வந்த திட்டங்கள், தொழிற்சாலைகள் இனி கொண்டுவர இருக்கும் திட்டங்கள் என அனைத்துமே இங்கு கார்பரேட் தரும் பணத்திற்கு மற்றும் மிரட்டலுக்கு என நன்றாக தெரிகிறது.தமிழகத்தின் ஆட்சியாளர்கள் பிடி நடுவணரசு கையில் உள்ளது என இங்குள்ள பச்சை குழந்தைக்கு கூட தெரியும்.

ஆனால் இங்குள்ளவர்களாலும், சட்டங்களாலும், நீதி மன்றங்களாலும் ஒன்றும் செய்ய இயலா மக்களாட்சியை நாம் கொண்டுள்ளோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநில ஆட்சியில் உள்ள கயவர்கள் மிக மிக மோசமான அழிவை நோக்கிய ஆட்சிக்கு வித்திட்டு வருகின்றனர்.

இது மேலும் தொடர்ந்தால் தன் சுய நலத்திற்காக 10 கோடி மக்களை பலியிட தயாராகிவிட்டனர் என்றே கூறலாம்.

ஆனால் இது எதை பற்றியும் கவலை இல்லாமல் ஒரு கூட்டம் மட்டைபந்து, கூத்தாடிகள் பின்னால் சென்று கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் இந்த கயவர்கள் நடுவணரசை எதிர்த்து ஒரு குரல் கொடுப்பார்கள் எனில் முக்கியத்துவம் கருதி அவர்கள் பின்னால் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களும் நிற்பார்கள.

ஆனால் இவர்கள் வருமானவரித்துறை (இதுவரை சம்பாதித்த பணம்) சிறை தண்டனை, உயிர் பயம், ஊடகங்களில் நாற வேண்டி வரும் என இவைகளுக்கு பயந்து அடிமையில் இருந்து துரோகியாக மாறி விட்டனர்.

உண்மையில் இவர்கள் இந்த மண்ணில் தான் இந்த இனத்தில் தான் பிறந்தார்களா?

தன் இனத்தை காப்பாற்ற தன் உயிரையே கொடையாய் வழங்கிய இனம் தானே இது..

தனது சுயமாியாதையை காப்பாற்றுவதற்காக உயிரையே கொடுக்கும் கூட்டம் தான் மானத்தமிழ் இனம். எங்கிருந்து இவர்களுக்கு இந்த புத்தி வந்தது?

தம்மால் தம்மை சுற்றியுள்ளவர்களால் பத்து கோடிக்கும் மேற்பட்ட பழந்தமிழ் இனம் அழிவை நோக்கி ஆயத்தப்படுத்தப்படுவதை கண்டும் எதிர்த்து குரல் கொடுக்க முடியவில்லை என்றால் இதுவரை உலகம் சந்தித்த பச்சைதுரோகிகளில் இவர்கள் தான் முதன்மையானவர்கள்.

எதிரிகளால் வீழ்த்தப்பட்டவர்களை விட துரோகிகளால் வீழ்த்தப்பட்டவர்கள் தான் அதிகம் என கேள்வி பட்ட வாக்கியம் இவர்களால் உண்மைத்தன்மையை பெறுகிறது.

நம் இனத்திற்கு கடைசி அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இயற்கையே துணை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.