11/11/2020

பெண்களைப் பற்றி கிறிஸ்தவ மதம் .... இஸ்லாமிய மதம்.. என்ன சொல்கிறது ... என்று பார்ப்போம்...

 


முதலில் பெண்களைப் பற்றி கிருஸ்தவம் கூறுவது...

ஆண் பெண்ணிலிருந்து தோன்றியவனல்ல, பெண்ணே ஆணிலிருந்து தோன்றியவள். பெண்ணுக்கு தலை ஆணே. ஆணின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவளே பெண். (கொரிந்தியர்11:3-9)..

வருடத்தில் மூன்று முறை ஆண்டவர் ஆண்களை பார்க்க விரும்புகிறார். பெண்களை பார்க்க விரும்புவதில்லை (Exodus 23:17).. 

பெண்கள் ஜபம் செய்யும் போது  முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் அவள் தலைமயிர் சிரைக்கப்படவேண்டும்; தலைமயிர் கத்தரிக்கப்படுவதும்,  சிரைக்கப்படுவதும் அவளுக்கு வெட்கமாக இருந்தால் முக்காடிட்டுக்கொள்ளட்டும் (கொரிந்தியர் 11:6)..

பரிசுத்த ஆவி ஏவாளிடம், "நீ குழந்தையை சுமந்து பெறும் போது உனக்கு தாங்க முடியாத வலியை நான் உண்டாக்குவேன். உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றுக்கும், உன் கணவனை சார்ந்தே இருக்கும்படி செய்வேன். உன் கணவனே உனக்கு அதிகாரி ஆவான்" (பைபிள் 3:16-19)..

சர்ச்சுக்குள் பெண்கள் வாய் திறந்து பேசக் கூடாது. அவர்கள் ஏதேனும் தெரிந்துகொள்ள விரும்பினால் வீட்டில் கணவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். சர்ச்சுக்குள் பெண்கள் பேசுவது வெட்கக்கேடானது (கொரிந்தியர் 14:33-35)..

விசுவாசம் இல்லாத மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். ஆனால் விசுவாசம் இல்லாத கணவனை மனைவி விவாகரத்து செய்ய முடியாது (மத்தேயு 5:32, 19:9)..

சுத்தமில்லாத மனைவியை கணவன்  விவாகரத்து செய்யலாம். ஆனால் சுத்தமில்லாத கணவனை மனைவி விவாகரத்து செய்ய முடியாது (Deuteronomy 24:1-4 )..

ஆண்டவருக்காக மனைவி மற்றும் குழந்தைகளைக் கைவிடுவது அனுமதிக்கப்பட்டது (மத்தேயு 19:29, மார்க் 10:29, லுக்கா 18:29).. 

மாதவிடாய் காலத்தில் 7 நாட்கள் பெண் அசுத்தமாகிறாள். அப்போது அவள் கடவுளுக்கு அசுத்தமானவளாகவும், பாவம் நிறைந்தவளாகவும் கருதப்படுகிறாள். அவள் உட்காரும் இடமும், படுக்கும் இடமும் அசுத்தமாகிறது. அவள் அருகில் செல்பவர்கள் அனைவரும் அன்று மாலை வரை அசுத்தமாகிறார்கள் (Leviticus 15:19-30, 33)..

பெண்களைப் பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. அவர்கள் ஆண்களுக்காக படைக்கப்பட்ட இயற்கை பயன்பாடு (Romans 1:27)...

பெண்களைப் பற்றி இஸ்லாம் கூறுவது...

பெண்கள் அறிவிலும், மதவாதத்திலும் குறைந்தவர்கள் (புகாரி 1.6.301)..

பெண்கள் விலா எலும்புகள் போன்று குறுகிய எண்ணம் கொண்டவர்கள். நிமிர்த்த நினைத்தால் உடைந்து போவார்கள் (புகாரி 7.62.113)..

பெண்களைவிட ஆண்களுக்கு தீங்கானது வேறேதும் இல்லை (புகாரி:7:62:33)..

நரகத்துக்கு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களே (புகாரி 7.62.124)..

கெட்ட சகுனங்கள் இருக்கும் என்றால் அவை குதிரை, பெண்கள், மற்றும் வீடுகளில் தான்.(புகாரி 7.62.32)..

தொழுகை செய்யும் போது நாய்கள், கழுதைகள் மற்றும் பெண்கள் குறுக்கே வந்தால், தொழுகை நிறுத்தப்படும். (புகாரி 1.9.490 )..

பெண்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அவர்கள் தங்களுக்கென எந்த உடமையும் இல்லாத வீட்டு பிராணிகள் போன்றவர்கள் (தபரி 9:1754)..

ஆண்கள் திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் அடிமை பெண்களை வைத்துக் கொள்ளலாம் (குரான் (4:24) மற்றும் (33:50))..

இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்கு சமம். சாட்சி சொல்ல இரண்டு ஆண்கள் தேவை, ஆனால் ஒருவர் தான் இருக்கிறார் என்றால், மறறோரு ஆணுக்கு பதில் இரண்டு பெண்கள் சாட்சி சொல்ல வேண்டும். (குரான் (4:11), (2:282)).. 

கீழ்படியாத பெண்களை இடித்துரையுங்கள், படுக்கையில் ஒதுக்கி வையுங்கள், உதை கொடுங்கள் (குரான் 4:34)..

ஆதாரம்...

https://www.exmuslim.org/insults-to-the-women-in-islam.html

https://www.christianbiblereference.org/faq_womensrights.htm

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.