11/11/2020

பண்டைய எகிப்தியரின் மின்விளக்கு...

 


எகிப்தில் டெண்டீரா வளாகப் பகுதிகளில் நடத்தப் பட்ட ஆய்வின் போது ஆராய்சியாளர்களை  ஆச்சர்யத்தை உண்டாக்கின சுவரில் செதுக்கப் பட்டு இருந்த கற்சித்திரங்கள். நிலவறைகளில், இரகசிய பெரிய அறைகள் மிகவும் பாதுகாக்கப் பட்ட பகுதிகளாகவும், அரசர் மற்றும் மிக முக்கிய மத போதகர்கள் மட்டுமே அனுமதிக்கப் பகுதியாகவும் இருந்திருக்கும் என நம்பப் படுகிறது.

அங்கு அவர்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தையும் அதிசயத்தையும் கொடுத்த செதுக்கப்பட்ட கற்சித்திர (கற்சிலை) வடிவம் ஒன்று,  அது இப்போது நமக்கு பரிசயமான ஒன்றாக இருக்கும் இருந்த பொருளை பிரதிபளிப்பதாக இருந்த  அதை பார்த்த போது மின் விளக்கு போன்று இருந்தது.

அந்த காலத்திய மின்விளக்கு சித்திரங்கள் எப்படி?

எகிப்தியர்கள் மின் விளக்கு பயன் படுத்தி இருப்பார்களா?

இருட்டான நிலவறைகளில் எப்படி வெளிச்சத்தை கொண்டு வந்து இருப்பார்கள்?

டார்ச் போன்ற உபகரணங்களை உபயோகப் படுத்தி இருப்பார்களா?

பக்க சுவர்களில் மட்டுமல்ல கூரைச் சுவர்களிலும் செதுக்கப்பட்ட சித்திரங்கள் காணப்பட்டன.

எகிப்திய பிரமீடுகளின் உட்புற அறைகளுக்கு, மிகப்பெரிய தாமிரக் கண்ணாடி பொருட்களை உபயோகித்து, சூரிய ஒளியை பிரதிபளிக்க செய்து வெளிச்சத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். விளக்குகளையோ மெழுகு வர்த்திகளோ ஏன் சிகர் லைட்டர்களோ கீஸா அறைகளில் எரியவில்லை. அப்படியானால் செயற்கை விளக்குகளை அவர்கள் பயன் படுத்தி இருக்கிறார்கள்.

சிற்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட  மின்சார விளக்கு..

தெந்தேரா அறைகளில் உள்ள மின்விளக்கு சுவர் செதுக்கு சிற்பத்தை ஆராய்ந்த போது தாமரை வடிவிலான அடிப்பாகமும் அதை சுற்றி பல்பு போன்ற உருவமும், நான்கு பேர் அதை தாங்கி பிடிப்பது போன்றும், பல்ப் உருவத்தின் உள்ளாக பாம்பு உருவமும் செதுக்கப் பட்டு இருந்தது.

அடுத்த கேள்வி சரி மேற்படி செதுக்கல் சிற்பம் ஏன் பிரமீடுகளின் உள் காணப் படவில்லை.  இந்த தொழில் நுட்பம் மிக ரகசியமான ஒன்றாகவும் தெந்தேரா ரகசிய கருவறைப் பகுதி போல அங்கு அமைக்கப் பட்டு இருப்பதற்கான முக்கிய காரணமும் இருந்திருக்கலாம்.

அடுத்து வரும் வாரிசுகளுக்கு இதை தெரிவிப்பதற்காகவும் இதை செதுக்கி வைத்திருக்கலாம்.

இன்னொரு முக்கிய கருத்து வேற்று கிரக வாசிகள் பிரமிடின் தொழில் நுட்பத்தையும், இது போன்ற பல நுட்ப ரகசியத்தையும் கற்றுக் கொடுத்திருக்கலாம் என்பது, ஆய்வுகள் தொடர்கின்றன.

வேற்று கிரக வாசிகள் பூமியோடு தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என அது குறித்து 1968 ல் தொடங்கி இன்னும் கள ஆராய்ச்சி செய்து நூல்களை (chariots of the gods) எழுதிவருகிறார் பிரபல ஜெர்மன் எழுத்தாளர் எரிக்வான் டேனிக்கன்.

மின்விளக்கு இருந்திருந்தால் மின்சாரம் இருந்திருக்க வேண்டும் அதற்கு மின் கலன்களை உபயோகித்து இருப்பார்களோ ?

மின்சாரம் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தான் கண்டுபிடிக்கப் பட்டதாக சொல்லப்படுவது சரியா?

மின் கலன்கள் எனும் போது பாக்தாத் பேட்டரிகள் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

பாக்தாத் பேட்டரிகளை பற்றி தகவலுடன் சொல்லப்படுவது அகத்தியர் காலத்தில் இது இருந்திருக்க வேண்டும் என்பது ஆனால் இதற்கு இது போன்ற ஆதாரம் கிடைக்கவில்லை (இரசவாத பாடலை மட்டுமே ஒரு சாரர் ஆதாரம் காட்டுகிறார்கள்) பாக்தாத் பேட்டரி பற்றிய விவரங்களுக்கு இங்கு சொடுக்கவும்.

எகிப்தியர்கள், ரோமானியர்களோடு இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு வாணிக தொடர்புகள் இருந்திருக்கிறது.

இந்த பதிவு குறிப்பாக அக்காலத்திய எகிப்திய மின் விளக்கு பற்றிய ஒரே ஒரு தகவலுக்காக மட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.