11/11/2020

இது தான் வாழ்க்கை...

 


சொந்தம் என்று சொல்வதெல்லாம்

உனக்கு சொந்தம் இல்லை...

நீ வந்தாய், வாழ்ந்தாய், சென்றாய்.

இதுதான் வாழ்க்கை...

பெற்றோர் வைத்த பெயரும்

பிணம் என்று மாறுது...

விரும்பி அணிந்த துணியும்

கந்தல் என்று ஆகுது...

பாடுபட்டு சேர்த்த சொத்தும்

வாரிசு இடம் சேருது...

கூடி வாழ்ந்த மனைவி

கூடவே வா சாகுது...

ஓடி ஆடி உழைத்த உடம்பு

உயிரை விட்டு கிடக்குது...

உயிர் கொடுப்பேன் என்றதெல்லாம்

ஊமை யாக நிற்குது...

சொந்தம் என்று சொல்வதெல்லாம் 

உனக்கு சொந்தம் இல்லை...

நீ வந்த இந்த உலகில்

அவன் தந்த உடம்பில்

சொந்தம் என்பது ஏதடா....

தங்கி செல்லும் வழிப்போக்கனே...

நீ வந்தாய், வாழ்ந்தாய், சென்றாய்.

இதுதான் வாழ்க்கை...

திருச்சிற்றம்பலம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.