மந்திரம் என்பதற்கு.. நினைப்பவரைக் காப்பது என்பது பொருள்.
நினைப்பவரைக் காப்பது இறைவனது திருவருளேயன்றி வேறொன்று அன்று.
ஆதலால் உண்மையில் மந்திரமாய் இருப்பது திருவருளே.
ஆயினும் அது சொற்களையும் சொற்றொடர்களையும் தனக்கு இடமாகக் கொண்டு அவற்றின் வாயிலாகவே புத்தி, முத்தி - ஆகிய பயன்களைத் தருகின்ற காரணத்தால்..
அச்சொற்களும் சொற்றொடர்களும் உபசார முறையில் மந்திரங்கள் எனப்படுகின்றன.
மந்திரங்களுள் தலையாயது திருவைந்தெழுத்து ஆகும்.
அது ஞானத்தைத் தரும் மறைமொழியாகும்.
வடமொழியில் அது பஞ்சாக்கரம் எனப்படும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.