04/12/2018

பல உண்மைகள் கொண்ட வரிகள்...


கடவுள் பாதி.. மிருகம் பாதி......
கலந்து செய்த கலவை நான்.....

வெளியே மிருகம்... உள்ளே கடவுள்...
விளங்க முடியா கவிதை நான்.....

மிருகம் கொன்று.... மிருகம் கொன்று....
கடவுள் வளர்க்கப்பார்க்கின்றேன்..... - ஆனால்...

கடவுள் கொன்று... உணவாய் தின்று..
மிருகம் மட்டும் வளர்கிறதே..........

நந்தகுமாரா... நந்தகுமாரா... நாளை மிருகம்.. கொல்வாயா...?
மிருகம் கொன்ற....... எச்சம் தின்று....... மீண்டும் கடவுள் செய்வாயா...?
குரங்கிருந்து மனிதன் என்றால் மனிதன் இறையாய் ஜனிப்பானா..?
மிருக ஜாதியில் பிறந்த மனிதா.. தேவ ஜோதியில் கலப்பாயா..?

நந்தகுமாரா.......................

கடவுள் பாதி.. மிருகம் பாதி......
கலந்து செய்த கலவை நான்.....

வெளியே மிருகம்... உள்ளே கடவுள்...
விளங்க முடியா கவிதை நான்.....

மிருகம் கொன்று.... மிருகம் கொன்று....
கடவுள் வளர்க்கப்பார்க்கின்றேன்...
கடவுள் கொன்று... உணவாய் தின்று..
மிருகம் மட்டும் வளர்கிறதே..........!

கடவுள் பாதி.. மிருகம் பாதி......
கலந்து செய்த கலவை நான்.....
காற்றில் ஏறி... மழையில் ஆடி...
கவிதை பாடும் பறவை நான்.....!

கடவுள் பாதி.. மிருகம் பாதி......
கலந்து செய்த கலவை நான்.....
காற்றில் ஏறி... மழையில் ஆடி...
கவிதை பாடும் பறவை நான்.....!

ஒவ்வொரு துளியும்... ஒவ்வொரு துளியும்
உயிரின் வேர்கள் குளிர்கிறதே...

எல்லா துளியும் குளிர்கிறபோது
இரு துளி மட்டும் சுடுகிறதே.....?

நந்தகுமாரா... நந்தகுமாரா... மழைநீர் சுடாது... தெரியாதா...
கன்னம் வழிகிற கண்ணீர்த்துளிதான் வெண்ணீர் துளியென அறிவாயா....?
சுட்ட மழையும்.. சுடாத மழையும் ஒன்றாய் கண்டவன் நீதானே...
கண்ணீர் மழையில்..... கண்ணீர் மழையில்..... குளிக்க வைத்தவன் நீதானே.......

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.