காலம் என்பது உங்களுக்கு வெளியே உள்ளது என்று நீங்கள் நினைத்தால் அதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
நேரம் என்பது உங்களுக்கு வெளியே இருப்பது அல்ல.
மனிதன் பூமியில் மறைந்து விட்டால் எனில் அங்கு காலம் நேரம் இருக்குமா?
மரங்கள் வளரும் ஆறுகள் ஓடும் மேகங்கள் வானத்தில் மிதக்கும். அங்கே நேரம் காலம் இருக்காது! கணங்கள் மட்டுமே இருக்கும் அங்கு ஒரு கணம்தான் இருக்கும் ஒரு கணம் மறையும் போது அடுத்து வந்துவிடும்.
அணுவை போன்ற கணங்களே இருக்கும்.
மரங்கள் எதற்க்குமே ஆசைபடுவது இல்லை.
அவை மலர்களுக்கு ஆசைபடுவதில்லை மலர்கள் தானாகவே வருகின்றன.
மலர்கள் வருவதென்பது அந்த மரத்தின் இயல்பின் பின் பகுதி ஆனால் மரங்கள் கனவு காண்பதில்லை, அந்த மரங்கள் நகர்வது இல்லை, அது யோசிப்பது இல்லை , அது ஆசைபடுவதில்லை.
அங்கு நேரம் என்பதே இல்லை நிலையான கணங்கள் மட்டுமே,
உங்கள் ஆசைகளால் தான் நேரத்தை உருவாக்குகிறீர்கள்.
ஆசை எவ்வளவு பெரிதோ அவ்வளவு அதிகமான நேரம் தேவைபடுகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.