கோலங்கள் பாகம் - 2...
கோலத் தமிழ் - concept of form..
நமக்கு இயல் இசை நாடக தமிழ் என முத்தமிழ் தான் இருக்கிறதென்று சொல்லி சொல்லி ஏமாற்றியிருக்கிறார்கள்....
கோலத்தமிழ் என்ற மற்றொரு தமிழும் இருந்திருக்கிறது.....
கோலத்தமிழ் என்பது சீரான அணுகளின் திரட்சியால் உருவாகும்
பற்பல வடிவங்களை பற்றி கூறும் உருவ இலக்கணத்தமிழ்
" காலமும் இடமும் கருத்துற நோக்கி
மூலமும் ஒளியும் முயன்று இனிது ஆய்ந்தே
ஞாலமும் விண்ணும் நவையற நோக்கி
கோலத் தமிழ்இயல் குறிக்கும் இந்நூலே " - ஐந்திறம் 32
Time,
space,
nature of ultimate principle ,
light,
cosmic structure
cosmic space
இவைகளை ஆராய்ந்து உருவாக்கப்பட்டது தான் கோலத்தமிழ் என்று மயன் கூறுகிறார்......
இதில் என்ன வருத்தம் என்றால்..... கோலத்தமிழ் என ஒன்று இருந்தது என தான் தெரிகிறதே தவிர... நம்முடைய கைக்கு கோலத்தமிழ் கிடைக்கவில்லை......
தமிழர்களின் தினசரி பழக்க வழக்கங்களில் கோலம் போடுவதும் ஒன்று..... இதற்கு ஏன் கோலம் (Form) என பெயர்..
மேலும் சரியான அமைப்பில் இல்லாததை அலங்கோலம் என அழைக்கிறோம்....
ஏனெனில் கோலம் என்பது ஒருவகை அதிர்வை வெளிப்படுத்த கூடிய வடிவியல் வரைவு ஓவியமே....
இதை ஏற்கனவே பழைய பதிவில் நாம் அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளோம்...
தமிழ் மொழி என்பது ஏதோ ஒரு பேசுவதற்கு பயண்படுத்தப்பட்ட மொழி மட்டும் அல்ல... குமரிகண்ட நாகரீகத்தின் கண்டுபிடிக்கப்பட்ட தகவலை கடத்த பயண்படுத்த உதவும் தகவல்களஞ்சியம்.... அதை சரியாக Decode செய்ய தவறியதே நாம் செய்த மிகப்பெரிய தவறு.....
பாதி விசயங்களை மேற்கத்திய நாகரீகமே கண்டுபிடித்தது என நிறுவிவிட்டனர் மீதம் உள்ளதை யாகிலும்..... நாம் மீட்டெடுக்க வேண்டும்......
ஐந்திறத்தில் உள்ளவற்றை தொடர்ந்து வெளிப்படுத்துகிறேன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.