இது போன்றதொரு டிசம்பர் 2 ஆம் தேதி இரவுப்பொழுதில் ஆயிரம் கனவுகளோடு தூங்கச்சென்ற போபால் நகரத்து மக்கள், கண் விழிக்காமலே இறந்து போனார்கள்..
உடனடியாக இறந்து போனவர்கள் 4000 மேல் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவில் அடுத்த இரண்டு வாரங்களில் கொத்துக்கொத்தாக மேலும் 5000 பேர் செத்து விழுந்தனர்.
558125 பேர் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள்.
இவை எல்லாமே அரசின் புள்ளி விபரங்கள் தாம்.உண்மையில் இதற்கு மேலும் இருக்கும் என்றே சொல்கிறார்கள்.
விபத்து ஏற்பட்டவுடன் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சன் பாதுகாப்பாய் அமெரிக்காவிற்கு தனி விமானத்தில் அப்போதைய மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டார்.
அதன் பிறகு நிவாரணம் கேட்டு எத்தனை போராட்டங்கள்..வழக்குகள், ஆர்ப்பாட்டங்கள்..
விபத்து நடந்த ஐந்து வருடங்கள் கழித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5200 கொடுப்பதாக யூனியன் கார்பைடு நிறுவனம் சொல்லியது.
அதை ஏற்றுக்கொள்ளாமல் வழக்குகள் தொடர்ந்தன.
ஆண்டர்சன் உட்பட 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத ஆண்டர்சன் அமெரிக்காவிற்கு அருகில் ஒரு தீவை விலைக்கு வாங்கி, அங்கெ உல்லாச வாழ்க்கை வாழ்ந்து தனது 95 ஆவது வயதில் இறந்தும் போனான்.(29 .9 .2014 ).
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நிவாரணம் கிடைத்தபாடில்லை.
அடுத்தடுத்த இரண்டு தலைமுறைகளும் வந்து விட்டன.
கம்பெனி கை மாறி விட்டது.
டவ் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் அதை விலைக்கு வாங்கியது.
யூனியன் கார்பைடு நிறுவனம் மீது தவறு ஏதும் இல்லை என்று வாதாடியவர் வழக்கறிஞர் அருண் ஜெட்லீ - அட ஆமாம் ஐயா..நம்ம நிதியமைச்சர் அருண் ஜெட்லீ தான்...
33 ஆண்டுகள் ஓடி விட்டன. (1984 ) மக்கள் வழக்கம் போல எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள்... என்று கிடைக்கும் நீதி ?
காங்கிரஸ் பிஜேபி இரண்டும் கார்ப்பேரட் நிறுவனங்களுக்கான கட்சி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.