1). திரிபலா என்பது கடுக்காய் ஒருபங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு, நெல்லிக்காய் நான்கு பங்கு ஆகிய மூன்றையும் வெயிலில் காய வைக்காமல் நிழலில் காய வைத்து நன்றாக அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும் இதுவே திரிபலாவாகும்.
இதை இரவில் உணவுக்கு பின் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வாருங்கள். இது அனைத்து நோய்களுக்கும் நிவாரணி ஆகும். இதனை எவர் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்தலாம்.
2). கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.
கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.
கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது.
3). கடுக்காய் பொடியை தேனில் கலந்து ஒரு வருட காலத்திற்கு தொடர்ந்து சாப்பிடுவதால் வயதானால் ஏற்படும் சரும் சுருக்கம் மறையும்.
கடுக்காயை அரைத்து சாப்பிடுவதால் நாக்கின் சுவை அறியும் தன்மையை அதிகரிக்க செய்ய முடியும்.
கடுக்காய் பொடியை உறிஞ்சும் போது மூக்கில் இரத்தம் வடிவது நிற்கும்.
கடுக்காய் பொடியை பல் தேய்க்க பயன்படுத்தினால் பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வலி, மற்றும் பல்லில் இருந்து இரத்தம் வருவது நிற்கும்.
தோலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வெண் புள்ளிகளை குணமாக்கும்.
பச்சை கடுக்காயை அரைத்து பாலில் சேர்த்து சாப்பிட வறட்டு இருமல் குணமாகும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.