11/06/2018

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் 14 வயது சிறுவனுக்கு 45 வயது பெண் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் கைது...


விஜயவாடாவில் உள்ள வேம்பே காலணியை சேர்ந்த 14 வயதுடைய ராகுல் என்கிற சிறுவன் கோடை விடுமுறைக்காக தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளான்.

விடுமுறை முடிந்த பிறகு அவனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்தனர் ஆனால் சிறுவன் ராகுல் வர மறுத்துள்ளான். அவனது பெற்றோர் தீர விசாரித்ததில் அந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் 45 வயது மதிப்புடைய பெண் அவனுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியதாக  தெரிவித்தான்.

இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்தனர் அதில் அந்த பெண்ணிற்கு கணவன் இல்லை. 2 மகள்களையும் திருமணம் செய்து வைத்தால் தனிமையில் வாடி வந்தாக தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து அந்த பெண்ணின் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.