11/06/2018

பாலைப்பழம்....


பாலைப்பழம் என்பது மிகவும் இனிப்பான ஒருவகைப் பழமாகும். இது இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் காடுகளில் வளரும் பாலை மரத்தில் காய்க்கும் பழமாகும்.

பாலைப்பழம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். பாலைப்பழம் காய்க்கும் காலத்தில் பாலைப்பழம் பருவம் என்றும் அழைப்பர்.

பாலைப்பழம் மிகவும் தித்திக்கும் இனிப்பு சுவைக்கொண்டது. அத்துடன் பாலைப்பழங்களை சாப்பிடும் போது அதனுள் இருக்கும் பிசின்போன்ற பால் பசைப்போல் வாயில் ஒட்டிக்கொள்ளும்.

பாலைப்பழம் உருவில் மிகவும் சிறியது. அதனை ஒன்று இரண்டு என்று விற்பனை செய்வதில்லை. ஒரு சுண்டு, இரண்டு சுண்டு என, அளவை களாகவே விற்பனை செய்வர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.