11/06/2018

300 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க அமைச்சர் வீரமணி மணல் மாபியா சேகர் ரெட்டியுடன் இணைந்து அராஜகம்...


வேலூர் புதிய பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தில் சாய் சிட்டி சென்டர் உள்ளது.

இங்கு வாகன பார்க்கிங் நிலையமும் செயல்பட்டு வந்தது.

சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தை அபகரிக்க அமைச்சர் வீரமணி, மணல் மாபியா சேகர் ரெட்டியுடன் சேர்ந்து முழு முனைப்புடன் இறங்கியுள்ளார்.

அதன் முதல் கட்டமாக நேற்றைய முன்தினம்(7.6.18) அவருடைய பி. ஏ மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்சி ஆட்களுடன் ஐந்து JCB இயந்திரங்களையும் அனுப்பி ஏற்கனவே  பல இலட்ச ரூபாய். செலவில் போடப்பட்ட சாலைகள், ஷெட்கள், வணிக வளாக கட்டுமானங்களை முழுமையாக நாசப்படுத்த செய்துள்ளார்.

அதுவும் அச்சமயம் செய்தி சேகரிக்க வந்த பல பத்திரிக்கையாளர்கள், கேமரா மேன்கள் முன்னிலையில் இந்த நாசவேலைகள் நடைபெற்றன.

அந்த இடத்தை தன் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவர, நேற்றும் தொடர்ந்து JCB இயந்திரங்களை பயன்படுத்தி முழுவதுமாக நாசப்படுத்த செய்துள்ளார்.

 ஒரு அமைச்சரே அராஜகமாக சேகர் ரெட்டியுடன் இணைந்து சட்ட விரோத பணியில் பகிரங்கமாக செயல்பட்டிருப்பது வேலூரில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.