11/06/2018

முதலில் இந்த பிரபஞ்ச சக்தி என்றால் என்ன என பார்ப்போம்...


இந்த சக்தி இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கின்றது. இது இயற்கையாகவே  எல்லா உயிரினத்திலும் உள்ளது. நாம் நம்முடைய செயற்கையான வாழ்கைமுறையின் மூலம்  நம்முடைய சக்தியை பெருமளவு இழந்துவிட்டோம். மீதம் இருப்பது நம்மையும் அறியாமல்  நாம் செய்யும் சுவாசத்தின் மூலமும் அவ்வப்போது நாம் செய்யும் தியானம் மற்றும்  இறைவழிபாடு மூலமும் தான்.

இந்த பிரபஞ்ச சக்தியை பெற வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டுவது தியானம் அல்லது  இறைவழிபாடு போன்றவைதான்.

இதில் தியானம் என்பது நாம் நினைப்பது போல முற்றும் துறந்த நிலை அல்ல. மாறாக  தியானம் என்பது ஒரு சுவாச பயிற்சியே ஆகும். நல்ல அமைதியான காற்றோட்டமான இடத்தில்  அமர்ந்து ரிலாக்ஸாக உங்களுக்கு பிடித்தமான ஒன்றை நினைத்து கொண்டு இருந்தாலே போதும்  உங்கள் உடம்பு தானாக பிரபஞ்ச சக்தியை கிரகிக்க ஆரம்பிக்கும்.

ஆனால் நீங்கள்  சிந்திக்கும் விஷயம் நேர்மறையாகவும் உங்கள் மனதிற்கு அமைதியை தரகூடியதாகவும் இருக்க
வேண்டும். இந்த நிலை உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க கூடியதாகவும் உங்கள் உடம்பை  நீங்கள் தள்ளி நின்று மனதளவில் ரசிக்க கூடிய நிலையிலும் இருக்க வேண்டும்.

பலர் தியானமும் இறைவழிபாடும் வெவ்வேறு என நினைக்கின்றார்கள். அது மிகவும் தவறு. 

இறைவழிபாடும் ஒரு வகையான தியானமே. இறைவழிபாட்டில் மனதை ஒருமுக படுத்தி இறைவனின்  அருளை நாம் உள்வாங்கி கொள்கின்றோம். தியானத்தின் மூலம் மனதை ஒருமுகபடுத்தி பிரபஞ்ச  சக்தியை உள்வாங்கி கொள்கின்றோம்.

நாத்தீகர்கள் இறைவனை பிரபஞ்ச சக்தி என கூறுகின்றார்கள்.

ஆத்தீகர்கள் இறைவனின் சக்தியை பிரபஞ்ச சக்தி என நம்புகின்றார்கள்.

சரி இதனால் என்ன பலன்...

நிறைய இருக்கின்றது குறிப்பாக உடல் ஆரோக்கியமாக இருக்கும். நன் உடலில் வரகூடிய  வியாதிகளுக்கு குறிப்பாக தோல் சம்பந்தபட்ட வியாதிகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும்  அதற்கெல்லாம் மூல காரணம் நம் உடலில் இருக்க கூடிய பிரபஞ்ச சக்தியில் அளவு குறைந்து  போனதே ஆகும்.

இந்த சக்தியினால் ந உடலில் ரத்த ஓட்டம் சீராகின்றது.. ரத்தஓட்டம்  சீராகும் போது நம் உடம்பு புத்துணர்ச்சி அடைகின்றது. முறையான இல்லற வாழ்கைக்கும் இது  துணை புரிகின்றது. இதய சம்பந்தமான வியாதிகளை பெருமளவு குறைகின்றது. இரத்த அழுத்தம்  போன்ற நோய்கள் அறவே வராது. இன்னும் சொல்ல போனால் நம் உடம்பிற்கு வரகூடிய பாதி  வியாதிகளுக்கு மனமே காரணம் என நான் சொல்ல வில்லை மருத்துவம் சொல்கின்றது. இந்த  தியானம் மற்றும் இறைவழிபாடு மூலம் நன் உடல் வியாதிகளில் பாதியை போக்கி  கொள்ள முடியும் என்பதே அறிவியல் உண்மை.

தியானத்தின் பலனை இந்த ஒரு பதிவில் எழுதிவிட முடியாது. என்னால் முடிந்ததை நான்  தற்போது பதிவிட்டுள்ளேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.