திருப்பதி ஏழுமலையான் கோயிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி உள்ளார்.
முன்னதாக,ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், திருப்பதி கோயிலை தாரைவார்ப்பதற்காக மத்திய அரசுடன் ஜெகன்மோகன் ரெட்டி கை கோர்த்துள்ளார் என்று குற்றஞ்சாட்டினார். ஆனால் ஏழுமலையான் கோயிலை கைப்பற்ற நினைக்கும் மத்திய அரசின் சதித் திட்டம் ஒரு போதும் நிறைவேறாது என்றும், அதற்கு தாம் எப்போதும் துணை நிற்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஏழுமலையான் கோயிலை விட்டுத் தர நாங்கள் தயாராக இல்லை. ஆந்திராவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதாக உறுதி அளித்த மோடி, அதனை நிறைவேற்ற தவறி விட்டார் என்றும் . திருப்பதி கோயிலை தொல்லியல் துறை எடுத்துக் கொள்வது குறித்து கருத்து தெரிவிக்குமாறு தேவஸ்தான நிர்வாகத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால் எதிர்ப்புக்கள் எழுந்ததை அடுத்து அந்த நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டது என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
பல கோடி ரூபாய் சொத்துகள் உள்ள கோயில்களில் பிரதானமானது திருப்பதி ஏழுமலையான் கோயிலாகும். சமீபகாலமாக மத்திய அரசு சார்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு இந்த கோயிலை தொல்லியல்துறைக்கு கீழ் கொண்டு வர முயற்சி நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.