11/06/2018

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தஞ்சையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்...


சற்று முன் தஞ்சை  தொடர்வண்டி நிலையம் அருகே காவேரி நகர் பகுதியில் இருளான இடத்தில் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் மீதும் மற்றும் உடன் வந்த  சீனு என்பவர் மீதும் தாக்குதல் நடத்தி கை பையையும் பிடுங்கிச்சென்றுள்ளனர் அடையாளம் தெரியாத நபர்கள்.

தற்பொழுது தஞ்சை வினோதன் மருத்துவ மனையில் அவசரசிகிச்சை பிரிவில் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கால் மற்றும் கை விரல்களில் சிராய்ப்பு இரத்தக் காயம் ஏற்பட்டுள்ளதால்  எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது.

பேருந்து நிலையத்திருந்து பின் தொடர்ந்து வந்து  திடீரென தாக்கியதாக உடன் வந்த தோழர் சீனு குறிப்பிட்டுள்ளார்.

யார் என்ன என்பது குறித்து தகவல் இல்லை.

இது குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.