#மிட்செல் நிலவில் நடந்த நாசா முன்னாள் விஞ்ஞானிகளில் ஒருவர்..
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பகுதியில் ராஸ்வெல் நகரில் கடந்த 1947ம் ஆண்டு நடந்த பறக்கும் தட்டு சம்பவதை பற்றி பார்த்தோம், அதில் வேற்றுகிரகவாசி ஒன்று இறந்தது போன்ற புகைப்படம் ஒன்றை நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான எட்கர் மிட்செல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த படம் பொய்யானது அல்லது இது ஒரு வதந்தி என்று பரவலாக
நம்பப்படுகிறது.
எனினும் கடந்த வாரம் நடந்த "பி விட்னஸ்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிட்செல் விடாப்பிடியாக கூறும்போது, கடந்த 70 வருடங்களுக்கு முன்பு ஒன்றிற்கும் மேற்பட்ட வேற்று கிரகவாசிகள் ராஸ்வெல் பகுதியில் தரை இறங்கின என்றும் அவற்றில் சில உயிருடன் பிடிபட்டன என்றும் கூறியுள்ளார்.
வேற்றுகிரகவாசி விண்கல விபத்தை பற்றி அவர் தொடர்ந்து கூறும்போது,
அது குறித்த உண்மை என்னவெனில் ராஸ்வெல் சம்பவம் நடக்கும்போது நான் அங்கு இருந்தேன். நான் பள்ளி படிப்பை முடித்து அப்பொழுது கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தேன். ஒரு நாள், ராஸ்வெல் நகரில் இருந்து வெளிவரும் ராஸ்வெல் டெய்லி ரெக்கார்டு என்ற நாளிதழில், வேற்று கிரகவாசிகளின் விண்கலம் ஒன்று வெடித்து சிதறியுள்ளது என்று செய்தி வெளியானது.
அதற்கு அடுத்த நாள் அந்த செய்தி விமான படையினரால் மறுக்கப்பட்டு இருந்தது. அது வானிலை பலூன் என தெரிவித்து இருந்தது. நான் அதனை நம்பி கொண்டு கல்லூரிக்கு சென்றேன் என அவர் கூறியுள்ளார். இந்த புகைப்படத்தில் உள்ளது வேற்று கிரகவாசி என்றும் அது குழந்தை ஒன்றின் மம்மி இல்லை என்று மாநாட்டில் மிட்செல் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, அதற்கு பின்பு பல வருடங்கள் கழித்து, நிலாவிற்கு சென்று திரும்பி வந்த பின், ராஸ்வெல் நகருக்கு சென்று அங்குள்ள மக்களிடம் நான் சிறுவனாக இருந்த சமயத்தில் இருந்து எனக்கு தெரிந்தவற்றை குறித்து அவர்களிடம் பேசினேன் என கூறியுள்ளார்.
ராஸ்வெல் சம்பவத்துடன் தொடர்புடைய பலரை குறித்து எனக்கு தெரியும்.
அவர்கள் தங்களது கதைகளை என்னிடம் கூறியுள்ளனர். அவர்களில் வேற்றுகிரகவாசிகளுக்கு சவபெட்டி தயாரித்து கொடுக்கும் நபரின் மகன் ஒருவர் மற்றும் விபத்து நடந்த சம்பவத்தில் போக்குவரத்தை சீர் செய்த ஷெரீப் ஒருவரின் மகன் ஆகியோரும் அடங்குவர்.
அவர் மெக்சிகோ நகரில் நடந்த 6 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால், உண்மையில் அவர் வீடியோ வழியே தொடர்பு கொண்டு பேசினார். அதிக வயது முதிர்வால் (வயது 84) தன்னால் நீண்ட பயணம் மேற்கொள்ள முடியவில்லை என அவர் கூறியுள்ளார். அடுத்த மாதம் பறக்கும் தட்டுகள் குறித்த மாநாடு நடைபெற உள்ள நிலையில்
"ஹை கண்ட்ரி" நியூசுக்கு அளித்த பேட்டி ஒன்றில், அதிகாரிகள் வேற்று கிரகவாசிகளின் வருகையை மிக அதிக ரகசியமாக வைத்திருக்கின்றனர் என்பது குறித்து கூறியுள்ளார்.
வேற்று கிரகவாசி குறித்து வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய புகைப்படம் குறித்து கூறிய அவர், அவை நிச்சயமாக மனிதன் இல்லை. அவர்கள் சாம்பல் நிறம் கொண்டு உள்ளனர் என கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறும்போது, அண்டத்தில் என்ன உயிரினங்கள் இருக்கின்றன என்பது குறித்து நமக்கு தெரியாது. ஏனெனில், பெரிய பீச் ஒன்றில் உள்ள மணல் போன்றது நமது கிரகம் என கூறியுள்ளார். கடந்த 1971ம் ஆண்டு அப்பல்லோ 14 திட்டத்தின்படி நிலவில் சென்று நடந்த 6 பேரில் கடைசி நபர் மிட்செல்.
செய்தி தாளில் வந்த தகவல் மிட்செல்லை பறக்கும் தட்டுகள் மீது உள்ள ஆர்வத்தை துளிர் விட செய்துள்ளது. அவரது நண்பரான அமெரிக்க விமான படை அதிகாரி ஒருவர் இதனை உண்மை என கூறியுள்ளார். இது போன்று பலரது கதைகளையும் கேட்டு கொண்டு நிலாவிற்கு சென்று திரும்பி வந்த உடன் அவர் பென்டகனுக்கு சென்றுள்ளார். அங்கு, இருந்தவர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். அவர்களது கருத்துகளையும் கேட்டுள்ளார்.
அவர் பேசிய அதிகாரி ஒருவர், எனக்கு இதனை குறித்து எதுவும் தெரியாது. அதனை நான் தேடி போகிறேன் என கூறியுள்ளார். அதன்பின் நியூ மெக்சிகோவிற்கு சென்று திரும்பி வந்து, அனைத்து இடத்திலும் அலசி ஆய்வு செய்தேன்.
உங்களது கதைகள் சரியானவை. அனைத்தும் உண்மை என்று கூறியுள்ளார். வேற்று கிரக வாசிகளின் விண்கல விபத்து சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் உயிருடன் கிடந்த வேற்று கிரக வாசிகளை அமெரிக்க அரசாங்கம் கண்டறிந்துள்ளது.
எனினும் ராஸ்வெல் சம்பவத்தை அவர்கள் மூடி மறைத்து விட்டனர். ஏனெனில் அவர்களது பயணம் குறித்து அதிகாரிகளுக்கு தெரியாது. அதனுடன் சோவியத் ரஷ்யா இதனை குறித்து எதுவும் கண்டறிந்து விட கூடாது என்பதற்கே என்று கூறியுள்ளார். தனது பணி காலத்தில் பூமிக்கு பல பறக்கும் தட்டுகள் வந்துள்ளன என்பதை நான் அறிவேன் என்றும் ஒவ்வொன்றையும் நாசா மூடி மறைத்துள்ளது என்றும் மிட்செல் கூறுகிறார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.