11/06/2018

பிரபஞ்ச படைப்பாளி.. இயற்கை.. கடவுள்...


இது அல்லது இவர் பிரபஞ்சத்தை படைத்த உயிர் அற்றவை (neutral or non living thing so thevai illa)...

மற்ற படைப்புகளான உயிரினங்களுக்கு ஒரு வரத்தையும் (+ive , protons) சாபத்தை பரிசாக தருகிறார் (-ive, electrons) இரு அணுவை போல இதில் ஒன்னு இல்லாவிட்டாலும் இயங்காது..

படைப்பாளியின் பொம்மைகள் நாம்.. அவன் விளையாடுவதற்கு படைக்கபட்வைகளில் உயிரிகளும் உயிரற்றவைஙளூம் ஆற்றல்களும்..

பிரபஞ்ச இயங்குதலுக்கு...

நல்லதுனு ஒன்னு இருந்தா கெட்டதுனு ஒன்று இருக்க வேண்டும்.. இல்லாவிட்டால்  netrual ஆகிடும் அதாவது நகராது/இயங்காது. இது தான் பிரபஞ்ச இயங்குதலில் முக்கிய தத்துவம்..

இவைகளை வைத்து விளையாடி கொண்டிருக்கான் அந்த படைப்பாளி  இது தான் இவனின் முழு நேர வேலை..

இதில் கொடுமை என்வென்றால் உயிரினங்களின் அடுத்தகட்ட பரிமான வளர்ச்சியில் மனிதர்களுக்கு நல்லது கெட்டது என்ற செயலை பிரித்து பார்க்கும் கதாபாத்திரத்தை தந்தான் அதுவே வரமாகவும் சாபமாகவும் இருக்கிறது..

வேண்டும் என்றால் மனித பரிமானம் ஆற்றலின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி 6வது அறிவின் முழு ஆற்றலை கொண்டு (ஞானக்கண்/மூன்றாவது கண் திறந்து) கடவுள் மாதிரி தங்களை காட்டிக்க முடியும் (ஒளியுடன் ஒளியாக இணைவது) ஆனால் படைப்பாளியாக முடியாது..

சதுரங்கத்தில் சிப்பாய்களை எதிரியின் கடைச்சி வரிசைக்கு/row கொண்டு சேர்த்தால் யானை, குதிரை, மந்திரி ஏன் ராணியாக கூட மாற்றிவிடலாம் ஆனால் ராஜாவாக மாற்ற முடியாது அது போலத்தான்..

எதற்காக இதை சொல்கிறேன் என்றால்
அவனுடன் சேர்ந்து  விளையாட்டை புரிந்து இவன் விளையாட்டுடன் சேர்ந்து விளையாட கத்துக்கோங்க புரிஞ்சுக்கோங்க நீங்களாவது ஒரு அளவுக்கு நிம்மதியாக இருக்க முடியும். விளையாட்டை மாற்றி அமைப்பது சாதியமற்றது..

இங்கு நடக்கிற அரசியலை அப்படியே  இதோட ஒப்பிட்டு பார் அரசியல் புரியும்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.