உலக நடப்புகளை மக்கள் அறிந்து கொள்ள எப்பொழுதுமே ஆவலாக உள்ளார்கள், அதாவது நடந்து முடிந்த நிகழ்வின் உண்மைத் தன்மைகளை செய்தித்தாள்கள், ஊடகங்கள், வலைதளங்கள் வழியாக அறிந்து கொள்ள இன்றைய மக்கள் மிகுந்த ஆவலாக உள்ளனர்.
ஆனால் வருங்காலத்தின் நிகழ்வுகளை நமது முன்னோர்களில் பலர் குறிப்பிட்டு சென்று உள்ளனர், அவைகளில் நாம் ஆர்வம் கொண்டு இருந்தாலும் நம்பகத்தன்மை நம்மிடையே குறைவாக இருப்பதனால் அதனை முழுமையாக நாம் எவரும் ஏற்றுக்கொள்வதில்லை.
சில நேரங்களில் விஞ்ஞானத்தின் மீது நாம் முழுமையாக நம்பிக்கை கொண்டு இருந்தாலும் அவைகள் நடந்து போகாமல் தோல்வியில் முடியும் போது மக்கள் அதனையும் ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள்.
ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த தொடர் ஆன்மீகமாகவும், மெய்ஞானமாகவும், சில சமயத்தில் விஞ்ஞானமாகவும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படலாம்,
இன்று இங்கு வெளிப்படும் விஷயங்கள் நமக்கு கற்பனையாக தெரிந்தாலும் அவை வருங்காலத்தின் நிஜத்தின் பக்கங்கள் எனபதை மட்டும் நாம் மறந்து விடக்கூடாது.
ஆகாயத்தில் ஒரு ஒளியாக வீற்றிருக்கும் சூரியன் நமது பூலோகம் மட்டுமின்றி பிற லோகங்களுக்கும் ஒளியை தரக்கூடிய ஒரு அற்புத படைப்பாகும்.
இந்த சூரியனை படைத்தது யார் ? (அ) உருவாக்கியது யார் ? இதனை பிரபஞ்சத்தில் எந்த சக்தி நிலைநிறுத்தி இயக்கி வருகிறது, அதன் பெயர் என்ன ? வடிவம் தான் என்ன ?
இவ்வினாக்கள் தினசரி நம் மக்களிடையே எழும்பும் அதிசய வினாக்களே, இவைகளுக்கு விஞ்ஞான ரீதியாகவும், ஆன்மீகக் கதைகள் ரீதியாகவும் பல விளக்கங்கள் இருப்பினும் நான் இங்கு அதைப்பற்றி உங்களோடு விவாதிக்க விரும்பவில்லை, இருக்கும் சூரியன் பல நாட்கள் நமது கண்களுக்கு தெரியாமல் போனால் என்ன நினைப்பீர்கள், அதற்கு காரணத்தை மெய்ஞானம் விளக்குமா ? (அ) விஞ்ஞானம்தான் விளக்கம் தருமா ? இப்படி ஒரு நிகழ்வு இந்த பிரபஞ்சத்தில் நமது பூலோகத்தை சார்ந்து நடக்குமா ? என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம், இருப்பினும் இந்த ஆகயத்தில் ஒரு ஒளி என்ற தொடரில் நாம் கூறும் முதல் தீர்க்க தரிசனம் இதுவே..
பலநாட்கள் நமது கண்களுக்கு சூரியன் தென்படாமல் போகும், இந்நிகழ்வின் வருகை நாட்களை பற்றி தெளிவு தேவையில்லை, எப்பொழுது நடக்கும் என்பதற்கும் விடையில்லை, ஆனால் சமீபமாக இது நடந்து முடியும்.
மறைந்த சூரியன் அதன்பின் தோன்றும், தோன்றும் சூரியனின் வடிவத்தில் பல மாற்றங்கள் காணப்படும், அதில் வெளிப்படும் சூரிய சக்தியின் அளவீட்டில் மாறுபாடு இருக்கும், கதிர் வீச்சில் பல புதிய சக்திகள் கூடியிருக்கும், இதுவே இந்த தீர்க்க தரிசனத்தின் வெளிப்பாடு.
மேலும் சூரியன் பல நாட்கள் மறையும் என்பது அனைத்து நாடுகளிலும் நடக்காது, இதுவே முக்கிய குறிப்பாகும்.
இருப்பினும் அது மறைவதற்கு முன் சிவப்பாக தென்படும், பின் சிறிது சிறிதாக கருமை நிறத்திற்கு மாறி, மாறி காட்சியளித்து, திடீரென்று காணாமல் போகும், அப்பொழுது பனிப்புயல் தோன்றும், கடல் அலைகள் அளவில் மிகுந்து எழுந்து ஆழிப்பேரலைகளை (சுனாமி) உருவாக்கும், நாடுகள் முழுவதும் புயல் மழை தாக்கும், மரணங்கள் பூமியில் மட்டுமின்றி, ஆகாயத்திலும் அதிகமாக எற்படும், மின்னலின் தாக்கம் அதிகமாக இருக்கும், மக்கள் பலநாட்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள், இதுவே இதன் முன் அறிகுறிகள்.
இந்த தீர்க்க தரிசனம் இங்கு எதைப்பற்றி தெரிவிக்க விரும்புகிறது, அது ஒருவரின் வருகை இப்புவியின் மீது நிகழ்வதற்கான முன் அறிவிப்பாகும், ஆம் இதுவே உண்மையும் கூட.. அவர் இந்துவா ? கிருஸ்துவா ? முஸ்லிம்மா ? அல்லது பெளத்தமா ? என்ற அற்ப கேள்விகளை யாரும் இங்கு எழுப்ப வேண்டாம், அது இறைவனின் வருகையை முன் அறிவிக்கும் ஒரு தீர்க்க தரிசனம் இது.. அமைதியுடன் காத்திருப்போம்..
இனி வானில் தென்படும் நட்சத்திர கூட்டங்களை கூர்ந்து கவனியுங்கள், பல மாற்றங்கள், மாறுதல்கள் தென்படும், விஞ்ஞானிகளும், ஜோதிடர்களும் பல விளக்கங்களையும், விவாதங்களையும், கருத்துக்களையும் முன்வைப்பார்கள், இது எப்பொழுது நிகழும் ? விரைவில்….. ஒரு பெளர்ணமி அன்று நடைபெறும்…….
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை..
வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது..
இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.