06/04/2017

ஜெயலலிதா ஆவி மிரட்டுகிறதா? போயஸ் தோட்ட வீட்டிற்குள் செல்ல சசிகலா குடும்பத்தினர் அச்சம்?


ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் தோட்ட வீட்டிற்குள் சசிகலா குடும்பத்தினர் செல்ல அச்சப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ்தோட்ட வீட்டிற்குள் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் செல்ல தயங்குவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது போயஸ் கார்டன் இல்லம் பராமரிப்பின்றி களையிழந்து காணப்படுகிறது.

போயஸ்தோட்டப்பகுதியில் ஜெயலலிதா தன் தாயார் நினைவாக கட்டிய வேதா நிலையம் வீடு கடந்த 1989ஆம் ஆண்டு முதலே பரபரப்பாக காணப்பட்டது. 1991ல் ஜெயலலிதா முதல்வரான பின்னர் கெடுபிடி அதிகரித்தது. ஆளுங்கட்சியோ எதிர்கட்சியோ எப்படி இருந்தாலும் ஜெயலலிதாவின் வீடு உள்ள சாலை பகுதி பாதுகாப்பு நிறைந்த பகுதியாகவே காணப்படும். இந்த கெடுபிடிகளால் போயஸ் தோட்ட பகுதியில் வசித்த ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் பாதிக்கப்பட்டனர்.

முக்கிய தலைவர்கள் வருகை - போயஸ் தோட்ட வீட்டிற்குள் கடந்த 20 ஆண்டுகளாகவே தேசிய அளவிலான அரசியல் கட்சித்தலைவர்கள் வந்து சென்றுள்ளனர். எல்.கே. அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வந்து ஜெயலலிதாவை போயஸ்தோட்ட இல்லத்தில் சந்தித்து விட்டு சென்றுள்ளனர். சிலர் விருந்தும் சாப்பிட்டுள்ளனர்

ஜெ ஜெ என களைகட்டிய கூட்டம்
ஜெயலலிதாவின் தரிசனம் பெற எப்போதும் அதிமுக தொண்டர்கள் போயஸ்தோட்ட வீடு உள்ள பகுதியில் காத்திருப்பார்கள். எல்லாம் டிசம்பர் 5ஆம்தேதியோடு முடிந்து விட்டதாகவே கூறலாம். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு காட்சிகளும் மாறிவிட்டன.

சசிகலா குடும்பத்தினர் - அனைத்து வசதிகளும் நிறைந்த ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா உடன் சசிகலா, இளவரசி, பணியாட்கள், அலுவலக உதவியாளர்கள் என தினசரியும் பத்துக்கும் மேற்பட்டோர் இருப்பார்கள். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சசிகலாவும், இளவரசியும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர். சசிகலா ஆதரவு நிலையில் இருந்த தொண்டர்கள் சகஜமாக போயஸ்தோட்ட வீட்டிற்குள் சென்றனர்.

ஆதரவாளர்கள் வருகை - தினசரியும் முக்கிய பிரமுகர்கள் பலரும் நேரில் வந்து சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்து விட்டு செல்வார்கள். எல்லாம் பிப்ரவரி 15ஆம் தேதி வரைதான். இதன்பின்னர் திடீர் திருப்பமாக உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்தது.

சிறைக்கு போன சசிகலா - சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற பின்னர் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் பேயாஸ் தோட்ட இல்லத்திற்கு செல்ல அச்சமடைந்துள்ளதாக தெரிகிறது.

விவேக் குடும்பம் - இளவரசியின் மகன் விவேக் தனது திருமணத்திற்குப் பிறகு சில வாரங்கள் போயஸ் தோட்ட வீட்டில் வசித்தார். டிடிவி தினகரனின் ஆளுகைக்குப் பிறகு அவரும் அமைதியாகி விட்டாராம். தனது தாய் இளவரசியும் சிறைக்கு சென்று விட்டதால் விவேக் தனது மனைவியுடன் மாமனார் வீட்டில் செட்டில் ஆகிவிட்டதாகவே தெரிகிறது.

தவிர்க்கும் டிடிவி தினகரன் - போயஸ் தோட்ட வீட்டிற்குள் செல்ல டிடிவி தினகரன் தயங்குவதால் கட்சி தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து சந்திக்கின்றனர். அலுவலகத்தில் பணியாற்றிவர்கள் மட்டுமே தற்போது போயஸ் தோட்ட வீட்டிற்கு சென்று வருகிறார்களாம்.

பராமரிக்க ஆள் இல்லை - ஜெயலலிதா வாழ்ந்த போது போயஸ்தோட்ட வீட்டு தோட்டமும், சுற்றுப்புறமும் சுத்தமாக பராமரிக்கப்படும். தற்போது அந்த வீடு உள்ள பகுதியே களையிழந்து காணப்படுகிறது. வர்தா புயலின் போது சாய்ந்த சில மரங்களைக் கூட வெட்டவில்லையாம். சமையல் அறையும், ஜெயலலிதா, சசிகலா பயன்படுத்திய பல அறைகள், பூஜை அறை, நூலகம் அனைத்தும் முடுப்பட்டு விட்டதாம்.

அச்சத்திற்கு காரணம் - ஜெயலலிதாவின் ஆன்மா பேசுவதாக பலரும் கூறி வரும் நிலையில் போயஸ்தோட்ட வீட்டிற்குள் ஜெயலலிதாவின் ஆன்மா சுற்றி வருவதாக பலரும் கிளப்பி விடத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகவும் சசிகலா குடும்பத்தினர் போயஸ்தோட்ட வீட்டிற்குள் செல்ல அச்சப்படுவதாக தெரிகிறது.

நினைவு இல்லமாக மாறுமா?

ஜெயலலிதா நினைவிடத்திற்கு தினசரியும் மலர்களால் அலங்காரம் செய்கின்றனர். ஆனால் போயஸ்கார்டன் வீட்டை பராமரிக்கமால் விட்டுள்ளதால் களையிழந்து காணப்படுகிறது.

எனவே ஜெயலலிதாவின் வீட்டை அரசே மீட்டு பராமரிக்க வேண்டும். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நினைவில்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.