06/04/2017

சூரிய வழிபாடு / சூரிய வழிபாட்டாளர் : அறிமுகம்...


வழிபாடு என்றால் விழுந்து வணங்குதல் என்ற பொருளிளேயே நாம் எண்ணி வருகிறோம். இங்கே வழிபாடு என்பது வழிபடுதல். அதாவது ஒன்று அல்லது ஒருவரின் வழியை பின்பற்றுதல்.

சூரிய வழிபாடு - சூரிய வழிபாடு என்பது சூரியனை பின்பற்றுதல். எப்படி பின்பற்றுவது ? சூரியனில் ஒளி விழும் நிலையை கணித்து அதனை பின் தொடர்தல்.

உலக வரலாற்றை நீங்கள் உற்று நோக்கினீர்கள், எனில் பெரும் நகரங்களையும் பெரும் கட்டிடங்களையும் கட்டியவர்கள் சூரிய வழிபாட்டாளராய் இருப்பர். இதற்கு உதாரணமாக மாயன்களையும் எகிப்தையும் சோழரையும் கூறலாம்.

சோழர் என்ற சொல்லே ஆங்கிலத்தில் சோலார் (Solar) என்ற சூரியனை குறிக்கும் சொல்லாக வழங்கப்படுகிறது. சோழர்கள் தங்களை சூரிய வம்சம் என கூறிக்கொண்டனர் என்பதையும் நோக்கவும்.

எகிப்து பாரோக்களும் தங்களை சூரியனின் வாரிசுகள். சூரியனின் மகன்
கள் என்றே கூறி கொண்டனர்.

நான் உதாரணமாக கூரிய மூன்று அரசுகளும் கூம்பு வடிவ பெரும் கட்டிடங்களை கட்டியவர்கள்.. இவை பெருமேடுகள்.

மாயங்களின் பெருமேடு... மாயன் பெருமேடு..
எகிப்தியரின் பெருமேடு.. எகிப்திய பெருமேடு..
சோழரின் பெருமேடு.. சோழ பெருமேடு..

சரி, இவற்றுக்கும் சூரிய வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு ?

சூரியனின் நிலைகளை கொண்டு காலத்தை கணித்து அதனை வழிபடுவோரே சூரிய வழிபாட்டாளர்..

சூரியனின் நிலைகளை துள்ளியமாக கணிக்க உதவியது  இந்த பெருமேடுகள்.

விழுவன் குச்சி மூலம் அதன் நிழல் விழும் கோணத்தை கொண்டு நேரம் நமது முன்னோர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

Obelisk என்பதும் விழுவன் குச்சிகளே...

வத்திக்கான் விழுவன் குச்சி..
வாசிங்டன் டி சி விழுவன் குச்சி..

பெருமேடு என்பதும் அதன் நிழல் விழும் கோணத்தை கொண்டு சூரியனின் நிலைகளை  ஆண்டு அளவில் கணிக்க பயன்படுத்தபட்டதாகும்.

விரைவில் இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பெருமேடு நிழல் - இவ்வாறு பெருமேடுகளை கட்டி அதன் வழி சூரியனின் வழியினை கணித்து அதன் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை தொடர்வது சூரிய வழிபாடு எனவும். இவ்வாறு சூரியனை வழிபட்டோர் சூரிய வழிபாட்டினர் என்றும் அழைக்கப்பட்டனர்.

ஆண்டு கணக்கை பின்பற்றுவோர் என கூறலாம்.

எல்லா சூரிய வழிபாட்டாளர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். கடல் வழி பயணம் மேற்கொண்ட இவர்கள் இவற்றை உலக முழுவதும் பரப்பினர்.

அடுத்தபதிவில் பார்க்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.