06/04/2017

பாம்பு இறைவி யும் அவளின் மகன்களும்...


Persius என்ற உரோமை கவிஞர் சொல்கிறார்..

இரு பாம்புகளை படமாக வரைந்தால் போதும், ஒரு இடம் புனிதமடையும்.

இந்த இரு பாம்புகளை மரத்தடியில் கண்ட நியாபகம் இருக்கா உங்களுக்கு, ஒரு வேலை இல்லை எனில், இந்த படத்தை பாருங்கள்..


இரு பாம்பு சரி , இது ஒரு புறம் இருக்கட்டும் நாம் பாம்பு இறைவி பற்றி பார்ப்போம், எனது தேடுதல் ஆங்கிலத்தில் இருப்பதால் முதலில் கிடைப்பது மேற்குலகினரால் ஆராயபட்ட பாம்பு இறைவி தான்.

இந்த பாம்பு இறைவி மக்களால் இயற்கை தாயாக வழிபடப்பட்டுள்ளாள்; இந்த இறைவியின் பிறப்பிடம் Crete . இது ஒரு மத்திய தரைக்கடல் பகுதி , தீவு. Crete என்பதிலிருந்து தான் Create என்ற சொல் வந்துள்ளது. இதற்கு உருவாக்கு என்று பொருள். இந்த தீவுடைய மற்றொரு சிறப்பு இது மூழ்கிபோன அட்லாண்டிக் கண்டத்தின் மீதம் உள்ள ஒரு தீவு; இது தான் மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் மேற்கத்திய நாகரிகத்தின் தாய் நிலம்.


33ம் நிலை Free Masonary, Manly P. Hall தனது நூலான Secret Teaching of All Ages ல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

பாம்பு என்பது பிரபஞ்ச மீட்பரின் சின்னம் மற்றும் மாதிரி; அவரே ஞானத்தையும் , நன்மை தீமை அறியும் திறனையும் உருவாக்கி உலகை மீட்பவர்.


இவர் எந்த பாம்பை சொல்கிறார் என எல்லாருக்கும் புரியும் என நம்புறேன். படத்தை போட்ட பிறகுமா தெரியாது ?

ஆனால், இந்த பாம்பு - மரம் நம் உடலாகிய சிறிய பிரபஞ்சத்தில் வேற ஒன்றையும் குறிக்கிறது. அதை வேறு பதிவில் பார்க்கலாம்.


தாய் பாம்பு இறைவியை வழிபட்டோர் பாம்பின் மகன்கள் என அழைக்கபடுகின்றனர். (SONS OF SERPENT). இவர்களுக்கு வரலாற்றில் பல பெயர்கள், அதில் ஒன்று பினீசியர்.

இவர்களை எகிப்தியர்கள் கடலின் மக்கள் (Sea People) என அழைத்தார்கள். இவர்களின் பூர்வீகம் Crete என்பதால் Cretens எனவும் அழைக்கபடுகிறார்கள்.


பழங்கால பினீசியர்கள் விவிலியத்தில் வரும் உண்மையான் இசுராயேல் குலத்தின் வாரிசுகள், Manly P. Hall கருத்துப்படி.. பினீசிய எபிரேயர்களே, உயிர் எழுத்துக்கள் , வரிவடிவ எழுத்துரு, மந்திரம், கலைகள், அறிவியல், ஆயுதம் , சட்டம், ஏவல் வழியாக மக்கள் தொகை குறைத்தல், கப்பல் கட்டுதல், கடல் வழி பாதைகள் ஆகியவற்றின் முன்னோடிகள். சில ஆயிரம் ஆண்டுகள் கடலின் அரசர்களாக திகழ்ந்தவர்கள்.

மேலும், உலகம் முழுவதும் ஒற்றை மதத்தை உருவாக்கியவர்கள் பினீசியர்கள். அது தான் பாம்பு வழிபாடு. விவிலியத்தின் முதல் ஐந்து நூல்கள் இவர்களால் உருவாக்கபட்டது. இந்த பாம்பு இனத்தின் வெவ்வேறு நபர்கள் விவிலியத்தில் இறைவங்களாகவும் இறைவிகளாகவும் சாத்தான்களாவும் சொல்லப்படுகின்றனர்.


இனி அந்த பாம்பு இறைவியோட படத்தை பார்ப்போம்.

ஒரு பெண் கைகளில் இரண்டு பாம்புகளோடு இருக்கிறாள் அல்லது
ஒரு அண்டம் இரு விந்தணுகள்..


சரி பினீசியர் எல்லா நாட்டுலையும் பாம்பு இறைவி வழிபாட்ட கொண்டு வந்தது உண்மையா இருக்குமா ?

உண்மை மாதிரி தான் தெரியுது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.