06/04/2017

பி.எப். உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களில் கை வைத்த மத்திய பாஜக மோடி அரசு...


வட்டி குறைப்பால் ஏழைகளுக்கு பாதிப்பு
அரசின் இந்த நடவடிக்கையால், வங்கிகளும் தங்களது டெபாசிட்டுகள் மீதான வட்டியை குறைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

இதனால் வங்கி சேமிப்புதாரர்களும் பாதிக்கப்படுவார்கள்.

பி.எப். உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய வட்டி விகிதம் அறிமுகமாகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு காலத்திற்கு இந்த வட்டி விகிதம் நடைமுறையில் இருக்கும்.

பப்ளிக் ப்ராவிடன்ட் ஃபண்ட், சுகன்யா சம்ருத்தி (செல்வ மகள் சேமிப்பு திட்டம்), முதியோர் சேமிப்பு திட்டங்களில் கை வைத்துவிட்டது மத்திய அரசு.

பெண் குழந்தைகள் சேமிப்பு இந்த புதிய விதிமுறைப்படி, பி.பி.எப் மற்றும் ஐந்தாண்டுகளுக்கான தேசிய சேமிப்பு சர்டிபிகேட் ஆகியவற்றுக்கு தற்போதுள்ள 8 சதவீத வட்டி இனிமேல் 7.9 சதவீதமாகும். பெண் குழந்தைகளுக்கான சிறு சேமிப்பு திட்டமான சுகன்ய சம்ருத்தி திட்டத்திற்கு தற்போது 8.5 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. இதிலும் கை வைத்துள்ள மத்திய அரசு, வட்டி விகிதத்தை 8.4 ஆக குறைத்துள்ளது.

காலாண்டு மாற்றம் - அரசின் முடிவுப்படி, சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சீனியர் சிட்டிசன்ஸ் - கிசான் விகாஸ் பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் 7.6 சதவீதமாகவும், ஐந்தாண்டுகளுக்கான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.4 சதவீதமாகவும், 5 ஆண்டுகளுக்கான தேசிய சேமிப்பு சர்டிபிகேட் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.9 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சேமிப்பு டெபாசிட்டுகள் மீதான வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடருகிறது.

மக்களுக்கு பாதிப்பு - அரசின் இந்த நடவடிக்கையால், வங்கிகளும் தங்களது டெபாசிட்டுகள் மீதான வட்டியை குறைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் வங்கி சேமிப்புதாரர்களும் பாதிக்கப்படுவார்கள்.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதலே, காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதங்களை மாற்றும் நடைமுறைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது குறிப்படித்தக்கது.

அரசின் பத்திரங்கள் முந்தைய 3 மாதங்களில் ஈட்டியதைவிட சற்று கூடுதலாக சிறுசேமிப்பு கடன்கள் மீதான வட்டியை நிர்ணயிக்க வேண்டும் என்பது ஷியாமளா கோபிநாத் குழு வழங்கிய பரிந்துரையாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.