06/04/2017

எதிர்காலத்தில் இந்திய ஒன்றியத்தில் இருந்து தனி நாடு கேட்கப் போகும் முதல் இனமாக தமிழினம் தான் இருக்கும் என்பதை மத்திய ஆட்சியாளர்கள் ஊகித்து விட்டார்கள்...


அவனுக்கு அப்படி தனிநாடு கிடைத்து விட்டால் அதன் பிறகு இந்தியாவின் மற்ற தேசிய இனங்களும் தனி நாடு கேட்பார்கள், அதற்கு தமிழர்களும் துணை செய்வார்கள்..

ஆதலால், தமிழனுக்கு இப்போதே நாடு இல்லாமல் செய்து விட வேண்டும்.

தமிழ்நாட்டை அவனிடம் இருந்து மொத்தமாக வளர்ச்சி என்ற பெயரால் கபளீகரம் செய்து ஆக்கிரமித்து , அவனை உள்நாட்டிலேயே அகதியாகி, மற்ற மாநிலத்துக்குள் தஞ்சம் பிழைக்க ஓட செய்து விட வேண்டும்.

நாடற்று போனால் பின்பு எதை தனி நாடு என்று அவன் கேட்க முடியும் ?

அதனால் தான் தமிழனின் விவசாயத்தை, பெரு நிலத்தை, கடலை, மண்ணை எல்லாம் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரால் கைப்பற்றிக் கொண்டு தமிழ் மக்களை விரட்டி அடிக்க  இந்திய அரசு முனைப்புடன் இறங்கி இருக்கிறது.

தமிழர்கள் இதை உணர்ந்துக் கொள்ள வேண்டும். இந்திய அரசை  எதிர்த்து களமாட முன்வர வேண்டும். இல்லையேல் அழிந்தோம், அழிந்தோம், அழிந்தோம். இது உறுதி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.