தமிழக அரசின் கோரிக்கை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள 3400 டாஸ்மாக் கடைகளை உடனே மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனே மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 5,672 டாஸ்மாக் கடைகளில் 3400 கடைகள் மூடப்பட்டுள்ளது. குறிப்பிடதக்கது..
பாமக வை சேர்ந்த வழக்கறிஞர் பாலு அவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது...
3400 கடைகளை மூட வைத்த பாலு அவர்களுக்கு பெண்களிடையே வெகுவாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றது என்பது அடிப்படையான குற்றச்சாட்டு.
எனினும் தமிழக அரசு கடைகளை தற்போது மூடி விட்டு, பின்னர் 500 மீட்டர் தொலைவிற்கு சற்று அப்பால் கடைகளை திறக்கவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
உதாரணமாக 501 வது மீட்டர் தொலைவில் கடையை திறந்தால் உச்ச நீதிமன்ற உத்தரவு கட்டுப்படுத்தாது.
எனினும் இதை எதிர்த்தும் வழக்கு தொடரப்படும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.