06/04/2017

அண்ணா துரையின் இரு மொழிக் கொள்கை என்பது மிகவும் சாமர்த்தியமாக தாய்மொழிக் கல்வி என்பதின் மூலம் தமிழனை ஏமாற்ற வழிசெய்தது...


இதன் மூலம் தனது நயவஞ்சக தமிழ் மொழி ஒழிப்புக் கொள்கையை மறைத்தார்.

அதாவது தமிழ்நாட்டில் வாழும் எவரும் அவரவர் தாய் மொழியில் கல்வி கற்கலாம். அவர்களுக்கு தமிழ் கட்டாயமில்லை.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், குஜராத்திகள், இந்தி பேசுவோர் தங்கள் தாய் மொழியில் படித்துக் கொள்ளலாம்.

அவர்கள் தமிழ்மொழியைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இன்னொரு புறம் தமிழை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி , ஆங்கிலத்தை தூக்கிப் பிடித்தும் தமிழர்களிடையே கலை இலக்கியங்கள் மூலமும் சினிமா மூலமும் திராவிட இயக்கத்தினர் பிரச்சாரம் செய்தனர்.

இதன் மூலம் தன் விரலைக் கொண்டே தன் கண்களை குருடாக்கிக் கொள்ள தமிழர்களைப் பழக்கினர்.

அதன் மூலம் தமிழர்களுக்கு தாய்மொழி வெறுப்பும் ஆங்கில மோகமும் கொண்டதால் அவர்கள் வெகு சுலபமாக பள்ளிகளில் தமிழை ஒழித்துக் கட்டி தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.

இது தான் திரவிடத்தின் தமிழ் மொழி ஒழிப்புக்கான திருட்டுத் தனமான இருட்டு இரு மொழிக் கொள்கை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.